பி.வி. சத்தியநாராயண்

இந்திய தடகள விளையாட்டு வீரர்

போன்டாடா வெங்கடா சத்தியநாராயண் (Bondata Venkata Satyanarayan) என்பவர் ஒர் இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1935 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். 1960 ஆம் ஆண்டு ரோம் நகரின் இத்தாலி மாகாணத்தில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்குப் பெற்றார். பிறகு 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், சப்பானின் தோக்கியோவில் நடைபெற்ற போட்டியிலும் நாராயண் நீளம் தாண்டுதல் போட்டியில் போட்டியிட்டார். இவர் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி காலமானார்.[1]

பி.வி. சத்தியநாராயண்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்புமே 9, 1935(1935-05-09)
இறப்பு23 ஏப்ரல் 2004(2004-04-23) (அகவை 68)
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்

மேற்கோள்கள்தொகு

  1. "B. V. Satyanarayan Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் 16 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.வி._சத்தியநாராயண்&oldid=2739068" இருந்து மீள்விக்கப்பட்டது