பி. எம். சுந்தரவதனன்

மருத்துவர் பி எம் சுந்தரவதனன் (en: Dr B M Sundaravadanan) சென்னையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும்[1][2][3], கல்வியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவில் மருத்துவம் முடித்த முதன்மையான மிகச் சிலருள் ஒருவரும் ஆவார்[4]. இவர் தமிழ்நாடு மருத்துவக்கழகத் தலைவராகவும், இந்திய அறுவை சிகிக்கை நிபுணர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலரும் ஆவார்.

மருத்துவர்
பெங்களூர் மாதவராய முதலியார் சுந்தரவதனன்
Picture of Dr B M Sundaravadanan, 1980.
தமிழ்நாடு மருத்துவர் கழகத்தலைவர்
பதவியில்
1976
மெட்ராஸ் மாகாண மருத்துவர் சங்கத்தலைவர்
பதவியில்
1940-1949
முன்னையவர்மருத்துவர் குருசாமி முதலியார்
பின்னவர்மருத்துவர் துக்காராம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1900
பெங்களூர்
இறப்பு1995,சென்னை
துணைவர்லக்ஷமிகாந்தாபாய்

வாழ்க்கை தொகு

மருத்துவர் சுந்தரவதனன் வட ஆற்காடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட துளுவ வேளாளர் [5] குடும்பத்தில் 1900ம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் இங்கிலாந்தில் பட்டம் பெற்றார். 30 ஆண்டுகாலம் சென்னை துளுவ வேளாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார். 1995ம் ஆண்டு காலமான இவரின் திருவுருவச்சிலையை திராவிடர்க் கழகத்தலைவர் கி வீரமணி திறந்துவைத்தார்.

வகித்த பதவிகள் தொகு

  • நிறுவனர் - இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம்
  • நிறுவனர் & தலைவர் - தி கீழ்பாக்கம் பெனிபிட் சாஸ்வத நிதி நிறுவனம்
  • தலைவர் - துளுவ வேளாளர் சங்கம்
  • நிறுவனர் - அனைந்திந்திய துளுவ வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "P.H. Road remains doctors' dream destination - The Hindu". 10 March 2014.
  2. "Mudaliars who maketh Madras - The New Indian Express". 08th September 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "சென்னை உருவாக்கத்தில் முதலியார்கள்! - தினமணி". 13 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. http://www.kbsnidhi.com/about.php
  5. "Former Presidents - Thuluva Vellalar | thuluva vellalar mudaliar matrimony | thuluva vellalar thirumana mandapam vellore". www.tuluvavellala.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._சுந்தரவதனன்&oldid=3926468" இலிருந்து மீள்விக்கப்பட்டது