பி. எம். பாரூக்

பி. எம். பாரூக் (B. M. Farooq) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த தொழிலதிபரும் ஆவார். இவரது சகோதரர் மங்களூர் நகர வடக்கு தொகுதியின் முன்னாள் இந்திய தேசிய காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் (மொகிதீன் பாவா) ஆவார். பாரூக் 4 சூன் 2018 அன்று, கர்நாடக சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் 11 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசு 4 இடங்களையும், ஜனதா தளம் (ச), 2 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி 5 இடங்களையும்[1] வென்றது. சட்ட மேலவை உறுப்பினர்களில் பணக்கார உறுப்பினராகப் பாரூக் உள்ளார்.[2]

பி. எம். பாரூக்
கர்நாடகா சட்டமன்ற (தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்
பதவியில்
Succeedingசையத் மெடியர் ஆகா, ஜே.டி. (எஸ்)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
வாழிடம்பெங்களூர்

மேற்கோள்கள் தொகு

  1. "11 members elected uncontested to Karnataka Legislative Council From Assembly". Iniindia.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  2. Jun 1, TNN /. "Tejaswini Gowda: JD(S) candidate B M Farooq is richest, BJP’s Tejaswini Gowda most educated | Bengaluru News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/jds-candidate-b-m-farooq-is-richest-bjps-tejaswini-gowda-most-educated/articleshow/64409209.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._பாரூக்&oldid=3501630" இலிருந்து மீள்விக்கப்பட்டது