பி. எஸ். வெங்கடேசன்

பி. எஸ். வெங்கடேசன் (பிறப்பு: ஆகத்து 24, 1934) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். பி.எஸ்.பரிதிதாசன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் சிலாங்கூர் மாநிலத் தேர்வாணைக் குழு உறுப்பினரும், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமாவார். மேலும் இவர் மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளராகவும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உதவித் தலைவராகவும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மலேசியக் கிளையின் உதவித் தலைவராகவும், தேவான் பஹாசா டான் புஸ்தகா அமைத்துள்ள பல்லின எழுத்தாளர் குழுவின் துணைச் செயலாளராகவும், கோயில் குழுக்களில் பொறுப்புள்ளவராகவும் இருந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1952 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக்கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள் தொகு

  • "பறந்து சென்ற பைங்கிளிக்கு" (1980);
  • "பரிதிதாசன் சிறுகதைகள் (1998)
  • "பரிதிதாசன் கட்டுரைத் திரட்டு" (1998);
  • "பரிதிதாசன் கருவிதைகள்" (1997);
  • "எல்லோருக்கும் ஏற்ற பரிதிதாசன் எளிய இலக்கணம்" (2001).

பரிசில்களும், விருதுகளும் தொகு

  • "எழுகதிர்" விருது
  • அரசாங்கம் வழங்கிய AMN விருது

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._வெங்கடேசன்&oldid=3220772" இலிருந்து மீள்விக்கப்பட்டது