பி. ஏ. சுப்பா ராவ்

இந்தியத் திரைப்பட இயக்குநர்

பி. ஏ. சுப்பா ராவ் (இறப்பு:1987 ) என்று நன்கு அறியப்பட்ட புகதா வெங்கட சுப்பா ராவ் ஓர் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமாவார். தெலுங்குத் திரையுலகில் வாழ்நாள் பங்களிப்பிற்காக ரகுபதி வெங்கையா விருதும் ஒரு பிலிம்பேர் விருதும் பெற்றார்.

பி. ஏ. சுப்பா ராவ்
பிறப்புபுகதா வெங்கட சுப்பா ராவ்
இறப்பு1987
பணிஇயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1950–1987

இவர் 1950இல் வெளிவந்த பல்லெட்டூரி பில்லா என்ற படத்துடன் கதாசிரியராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் என தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல்துறை நடிகரும், அரசியல்வாதியுமான என். டி. ராமாராவுக்கு இந்தப் படத்தில் நாயகனாக முதல் வாய்ப்பு கொடுத்தார். இது ஒரு சிறிய வணிக வெற்றியாக இருந்தது. மேலும் இவரும் நாயகனும் இப்படத்திலிருந்து நல்ல பெயரைப் பெற்றனர்.

பி.ஏ.எஸ்.புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜு பேடா, செஞ்சு லட்சுமி , பீஷ்மர் போன்ற சில படங்களை தயாரித்துள்ளார்.

இவர் 1954 இல் என். டி. ராமாராவ், சுதாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ராஜூ பேடாவை உருவாக்கினார். இது மார்க் டுவெய்ன் எழுதிய நூலின் அடிப்படையில் உருவான தி பிரின்ஸ் அண்ட் தி பாப்பர் என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[1]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஏ._சுப்பா_ராவ்&oldid=3899328" இலிருந்து மீள்விக்கப்பட்டது