பி. சிவனடி

தமிழ் எழுத்தாளர்

பி. சிவனடி இந்திய சரித்திரக் களஞ்சியம் தொகுத்தது மூலம் அறியப்படுகிறார்.[1]


வரலாறு

தொகு

சிவனடி இந்திய நாட்டில் தமிழ் நாடு மாநிலத்தில் விருதுநகரில் பிறந்து, விருதுநகர் இந்து நாடார் கல்லூரியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். தன் ஓய்வுகாலங்களில் தமிழகத் தலைநகரான சென்னையில் வாழ்ந்தவர்.

முயற்சி

தொகு

தன் வாழ்நாளில் தமது முன்னோர்களின் ஐந்து தலைமுறைகளைப்பற்றி அறிந்துகொள்ள முற்பட்டார். இதன் விளைவாக உருவானதே இந்திய சரித்திரக் களஞ்சியம் ஆகும். 17ம் நூற்றாண்டு துவங்கி 2000ம் ஆண்டுவரை பத்து, பத்து ஆண்டுகளாக பிரித்து தனது முதல் தொகுப்பான 1701 முதல் 1710 வரையான தொகுப்பை அவர் வெளியிடும்போது அவருக்கு வயது 60 ஆனது. அவர் 16 தொகுப்பு வரை எழுதி 14வது தொகுப்பை பிரசுரம் மட்டுமே செய்ய முடிந்தது.[2] மற்ற இரண்டு தொகுப்புகள் பிரசுரம் ஆகவில்லை.[3]

பிரசுரிக்கப்பட்டவை

தொகு
தொகுதி புத்தகம் களஞ்சிய ஆண்டு பதிப்பு ஆண்டு
முதற் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1701-1710 1987
முதற் பகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் (முன்னுரை) 1988
இரண்டாம் தொகுதி(இரண்டாம் பகுதி) இந்திய சரித்திரக் களஞ்சியம் 1711-1720 1889
மூன்றாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1721-1730 1990
நான்காம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1731-1740 1991
ஐந்தாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1741-1750 1991
ஆறாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1751-1760 1992
ஏழாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1761-1770 1993
எட்டாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1771-1780 1994
ஒன்பதாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1781-1790 1994
பத்தாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1791-1800 1995
பதினோன்றாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1781-1890 1996
பன்னிரண்டாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1811-1820 1997
பதின்மூன்றாம் தொகுதி இந்திய சரித்திரக் களஞ்சியம் 1821-1830 1997

மறுபதிப்பு

தொகு

பி. சிவனடியின் புத்தகங்களை மறுபதிப்பு செய்து கணித ஆசிரியர் ஏ. வெண்ணிலா என்பவர் வெளியிட்டுள்ளார்.[4][5][6]

எழுத்தாளர் கருத்து

தொகு

எழுத்தாளர் சுஜாதா இவரைப்பற்றிக் கூறும்போது ”பல ஆண்டுகள் நிகழ்ந்த சம்பவங்களை மிகவும் சுவைபட பத்து, பத்து ஆண்டுகளாக பிரித்து விஸ்தாரமான பின்னணிச் செய்திகளுடன் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார். இவரின் முப்பது தொகுதியையும் அவர் முடிக்க வாழ்த்துக்கள். தைரியமாகவும், தெளிவாகவும் எழுதப்பட்ட உரைநடையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைவு

தொகு

இவர் 13ம் தொகுதியை பிரசுரம் செய்தபின் சென்னையில் இயற்கை எய்தினார்.

மேற்கோள்

தொகு
  1. "ப.சிவனடி எழுதிய இந்திய சரித்திர களஞ்சியம்". Archived from the original on 2014-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.
  2. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=16367
  3. http://www.puthiyaparvai.com/index.php?option=com_content&view=article&id=42:2012-08-10-11-39-50&catid=16:2012-08-09-17-52-03&Itemid=167[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.thehindu.com/books/history-in-the-remaking/article2900071.ece
  5. http://chennaifocus.wordpress.com/2012/03/02/thanks-to-poet-vennila-an-unnoticed-gem-historian-p-sivanadi-and-his-works-becomes-visible/
  6. http://www.blogtopsites.com/sitedetails_125215.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சிவனடி&oldid=3711242" இலிருந்து மீள்விக்கப்பட்டது