பி. ஜி. வுட்ஹவுஸ்
சர் பெல்ஹம் கிரென்வில் வுட்ஹவுஸ் (15 அக்டோபர் 1881 - 14 பிப்ரவரி 1975) ஓர் ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர். அவருடைய எழுத்துகளில் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் உட்பட்ட அனைத்தும் அடங்கும். எழுபது ஆண்டு காலம் தொடர்ந்து எழுதியவர். அவர் எழுத்துகள் இன்றும் பரவலாக வாசிக்கப்படுகின்றன. அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பல தடுமாற்றங்களைத் தன் வாழ்வில் சந்தித்ததால், ஃபிரான்சிலும் அமெரிக்காவிலும் அவர் மிகுதியான வாழ்க்கையைக் கழித்தார். ஆனாலும் இவரது முக்கிய எழுத்துக்களம், பிறப்பு, படிப்பு, இளமைகாலம் என இவரது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில், முதலாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் இருந்த ஆங்கிலேய மேல்தட்டு மக்கள் வாழ்க்கையைச் சார்ந்ததாக இருந்தது.
சர் பி. ஜி. வுட்ஹவுஸ் | |
---|---|
1904ல் வுட்ஹவுஸ் (வயது 23). | |
பிறப்பு | பெல்ஹம் கிரென்வில் வுட்ஹவுஸ் 15 அக்டோபர் 1881 கில்ட்ஃபோர்ட், சர்ரெ, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 14 பெப்ரவரி 1975 சவுத்தாம்ட்டன் (நகரம்), நியுயார்க், ஐக்கிய அமெரிக்க குடியரசு | (அகவை 93)
புனைபெயர் |
|
தொழில் | நகைச்சுவை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடககர்த்தா, பாடலாசிரியர் |
தேசியம் | பிரித்தானியர் அமெரிக்கர் (1955ல் 74ஆம் வயதில் குடியிரிமை) |
காலம் | 1902–75 |
வகை | நகைச்சுவை, கற்பனைவாத நகைச்சுவை |
ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில உரைநடை விற்பன்னரான வுட்ஹவுஸ், அவருடைய சமகாலத்தவர்களான ஹிலாய்ரெ பெல்லாக், எவெலைன் வாக் மற்றும் ரட்யார்ட் கிப்ளிங் அவர்களிடையேயும், அண்மைய எழுத்தாளர்களான ஸ்டீபன் ஃபிரை[1], டக்லஸ் ஆடம்ஸ்[2], ஜே. கே. ரௌலிங்[3] மற்றும் ஜான் லெ கர்ரே[4] போன்றோரிடையேயும் நன்மதிப்பு பெற்றவர்.
இன்று ஜீவ்ஸ் மற்றும் பிலான்டிங்ஸ் காஸ்ட்ல் புதினங்களாலும், சிறுகதைகளினாலும் அறியப்படுபவர். வுட்ஹவுஸ் மேலும் ஒரு நாடககர்த்தாவும், பாடலாசிரியரும் ஆவார். அவர் பதினைந்து மேடை நாடகங்களுக்கு பகுதி எழுத்தாளர் ஆவார். முப்பது இசை-நகைச்சுவை நாடகங்களில், இருநூற்றைம்பது பாடல்களில் பங்குகொண்டிருக்கிறார். இவை பெரும்பாலும் ஜெரோம் கெர்னும் கய் போல்டனும் தயாரித்த நாடகங்களாகும். அவர் கோல் போர்ட்டருடன் எனிதிங் கோஸ்(1934) என்ற இசை நாடகத்தில் பணிபுரிந்திருக்கிறார். கெர்ன்ஸ் இசையில் புகழ்பெற்ற ஷோ போட் இசை நாடகத்தில் வரும் பில் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். கெர்ஷ்வின் - ராம்பர்க் அவர்களின் நாடகமான ரோசலியில்(1928), சிக்மன்ட் ராம்பர்க் இசைக்கு வரிகள் புனைந்திருக்கிறார். ருடால்ஃப் ஃப்ரிம்லுடன் அவருடைய இசைநாடகமான தி திரீ மஸ்கெட்டியர்சில் (1928) பணிபுரிந்திருக்கிறார். அவர் பாடலாசிரியர்களின் காட்சியகத்தில் இடம் வகிக்கிறார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fry on Wodehouse". PG Wodehouse books. 14 February 1975. பார்க்கப்பட்ட நாள் 2011-10-26.
- ↑ Adams, Douglas (2002). The Salmon of Doubt: Hitchhiking the Galaxy One Last Time. New York: Harmony Books. pp. 63–67.
- ↑ "J.K. Rowling: By the Book". The New York Times.
- ↑ "Personal Best: Right Ho, Jeeves". Salon. 1 October 1996. பார்க்கப்பட்ட நாள் 2012-04-17.
- ↑ "Songwriters Hall of Fame". Songwriters Hall of Fame. 14 February 1975. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-10-26.