பி. பி. சௌதரி

இந்திய அரசியல்வாதி

பி. பி. சௌதரி  (பிறப்பு: 12 ஜூலை 1953) (நாடாளுமன்ற உறுப்பினர், பாலி, மக்களவைத் தொகுதி- ராஜஸ்தான் )  என்பவர் தற்போது நரேந்திர மோதி தலைமையிலான  2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிருவாகத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளின் இணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[1] நாடாளுமன்ற கூட்டுக்குழுக்கள் மற்றும் பல்வேறு நிலைக்குழுக்களில் தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்துள்ளார்.   பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பாலி மக்களவைத் தொகுதியில் 4,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பி._சௌதரி&oldid=3480312" இலிருந்து மீள்விக்கப்பட்டது