பி. முகம்மது இஸ்மாயில்

இந்திய அரசியல்வாதி

பி. முகமது இசுமாயில் (P. Mohammad Ismail) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான இவர் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1980-1984 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார். 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இருந்த 9 சனதா கட்சி பாராளுமன்றக் குழு உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். 1991 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் முகமது இசுமாயில் நாகர்கோவில் தொகுதியில் ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 

2005 ஆம் ஆண்டு முதல் ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். முன்னதாக 1984-89 ஆம் ஆண்டுகளில் இவர் தமிழ்நாடு ஜனதா கட்சித் தலைவராக இருந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Eci.nic.in. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  2. "BJP invoking religious sentiments to cement corruption". Thehindu.com. 14 October 2014. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._முகம்மது_இஸ்மாயில்&oldid=3692414" இலிருந்து மீள்விக்கப்பட்டது