பீகார் சேக்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு
பீகார் சேக் (Shaikhs of Bihar) என்பது இந்திய மாநிலமான பீகாரில் பொதுவாகக் காணப்படும் ஒரு முஸ்லீம் சமூகம். இவர்கள் தெற்காசியாவின் பெரிய சேக் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். பீகாரின் சேக் நிலப்பிரபுக்கள் அல்ல. இவர்கள் பெரும்பாலும் கடைகள் நடத்துபவர்களாகவும் சிறு கைவினைப் பணி செய்பவர்களாகவும் உள்ளனர். பீகாரி முசுலிம்களில் சேக் சமூகம் மிகவும் அதிகமாக உள்ளனர். முகலாய வம்சத்தினைச் சார்ந்த முசுலிம்கள் குறைந்த அளவிலே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவர்கள் கைவினைஞர்கள், பனியாக்கள், சூத்திரர்கள் மற்றும் பிராமணர்கள் போன்ற பல்வேறு சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் இவர்கள்.[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இந்தியா | |
மொழி(கள்) | |
உருது, இந்தி, & பீகாரி மொழிகள் | |
சமயங்கள் | |
அதிகமாக சுன்னி இசுலாம் அனாபி, இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
குல்கயா, செர்சாகபாதியா, உத்திரப் பிரதேச சேக், ராஜஸ்தான் சேக், தெற்காசிய சேக் & பஞ்சாபி சேக் |
மேலும் பார்க்கவும்
தொகு- தெற்காசியாவில் ஷேக்குகள்
- உத்தரபிரதேசத்தின் ஷேக்
- சித்திக்
- முஸ்லிம் காயஸ்தர்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Ahmad, Zeyauddin (2011-06-03) (in en). Caste Elements Among the Muslims of Bihar. De Gruyter Mouton. doi:10.1515/9783110807752.337. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-11-080775-2. https://www.degruyter.com/document/doi/10.1515/9783110807752.337/html.