பீட்டர் மோயின்

பீட்டர் மோயின் (Petter Moen, 14 பெப்ரவரி 1901 - 8 செப்டம்பர் 1944) ஒரு நோர்வே எதிர்ப்பாளராக இருந்தார். இவர் எழுதிய நாட்குறிப்புகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார்.

நாட்சி செருமனி நோர்வே நாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது இவர் லண்டன் டைட் என்னும் பெயரில் ஒரு இரகசியப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார்.[1] இவர் 1944 பெப்ரவரியில் செருமனிய அதிகாரிகள் பல இரகசியப் பத்திரிகைகளைக் கண்டெடுத்தபோது, இவர் கைது செய்யப்பட்டார்.[2] மோல்லர்காட்டாவில் சிறைவாசம் அனுபவித்த இவர், வெசுட்பாலென் என்ற கப்பலில் செருமனிக்கு அனுப்பப்பட்ட போது 1944 செப்டம்பரில் உயிரிழந்தார்.[3] சிறைச்சாலைக் கழிப்பறையில் இவர் ஒரு முள் கொண்டு எழுதிய நாட்குறிப்புக்காக இவர் பெரிதும் அறியப்பட்டார்.[4] இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இவரது நாட்குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[5] இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Skodvin, Magne "Petter Moen". leksikon. Oslo: Kunnskapsforlaget. அணுகப்பட்டது 26-10-2009. 
  2. Voksø, Per, ed. (1984). "Det store pressekrakket". Krigens Dagbok (in Norwegian). Oslo: Det Beste. p. 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-7010-166-4.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Moland, Arnfinn (1995). "Moen, Petter". Norsk krigsleksikon 1940-45. Oslo: Cappelen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-02-14138-9. அணுகப்பட்டது 26-10-2009.  பரணிடப்பட்டது 2014-05-28 at the வந்தவழி இயந்திரம்
  4. Kraglund, Ivar "Petter Moen". Norsk biografisk leksikon. Ed. Knut Helle. Oslo: Kunnskapsforlaget. அணுகப்பட்டது 26-10-2009. 
  5. Petter Moens dagbok (in Norwegian). Oslo: Cappelen. 1949.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_மோயின்&oldid=3507204" இலிருந்து மீள்விக்கப்பட்டது