பீட்டா துகள்
பீட்டா துகள்கள் (Beta particle) என்பது கதிரியக்க உட்கருக்களிலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட உயர் வேக எதிர்மின்னிகள் அல்லது பொசித்திரன்கள் ஆகும். உமிழப்படும் பீட்டா துகள்கள் அயனாக்கற்கதிர்ப்பின் வடிவத்தில் உள்ளன, இவை பீட்டா கதிர்கள் என அறியப்படுகிறது. பீட்டா துகள்கள் உற்பத்தி பீட்டா சிதைவு எனப்படுகிறது. இது கிரேக்க எழுத்து பீட்டா (β) மூலம் குறிப்பிடப்படுகிறது. இரு பீட்டா சிதைவு வடிவங்களான β− மற்றும் β+ முறையே எதிர்மின்னி மற்றும் பொசித்திரனில் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து வெளிப்படும் β துகள்கள் பீட்டாகதிர்கள் என்றும் அறியப்படுகின்றன. இவ்வினை பொதுவாக அணுஎண் 79 விட குறைந்த தனிமங்களிலேயே காணப்படுகின்றன. இங்கு சேய் தனிமத்தின் அணுநிறை மாறுவதில்லை, ஆனால் அதன் அணுஎண் β+ ஆனால் ஒன்று கூடவும் ,β- என்றால் ஒன்று குறையவும் செய்கின்றன.ஒருகதிர் தனிமத்திலிருந்து வெளிப்படும் β துகள்கள் ஒரே ஆற்றல் கொண்டு இருப்பதில்லை. இவைகளின் சராசரி ஆற்றல்,உச்ச ஆற்றலின் 1/3 ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
β துகள்களின் திசைவேகம் ஒளியின் வேகத்தில் 90% முதல் 95% வரையிலும் உள்ளன.
வளியில் அவைகளின் செல்தொலைவு சில மீட்டர் வரையிலும் இருக்கும்.
α துகள்களைப் போல் இத்துகள்களும் அயனியாக்கும் பண்புடையன, ஆனால் குறைந்த அளவில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவைகளின் நிறை குறைவாக இருப்பதால் அவைகள் எளிதில் விலக்கமுறுகின்றன.
அவைகளின் செல்தொலைவு ,ஊடகத்தின் அடர்த்தியினையும் துகள்களின் ஆற்றலையும் பொறுத்திருக்கிறது.
மருத்துவத்தில் பயன் படும் சில β உமிழ்வான்கள்.
- கார்பன் (14C)
- கோபால்ட்டு (60Co)
- தங்கம் (198Au)
- அயடீன் (131I)
- பாசுபரசு (32P) முதலியன.
β− பீட்டா சிதைவு (எதிர்மின்னி காலல்)
தொகுநிலையற்ற அணுக்கருவின், மிகுதியான நொதுமின்னிகள் β−சிதைவுக்கு உள்ளாகிறது. அங்கே ஒரு நொதுமின்னியானது நேர்மின்னி, எதிர்மின்னி மற்றும் ஒரு எதிர்மின்னி-வகை எதிர்நியூட்ரினோவாக (நியூட்ரினோவின் எதிர்த் துகள்) மாற்றப்படுகிறது.
- n → p + e−
+ ν
e
β+ பீட்டா சிதைவு (பொசித்திரன் காலல்)
தொகுநிலையற்ற அணுக்கருவின், மிகுதியான நேர்மின்னிகள் β+ சிதைவுக்கு உள்ளாகிறது. அங்கே ஒரு நேர்மின்னியானது, நொதுமின்னி, பொசித்திரன் மற்றும் ஒரு எதிர்மின்னி-வகை நியூட்ரினோவாக மாற்றப்படுகிறது.
- p → n + e+
+ ν
e
சான்றுகள்
தொகு- BARC notes