பீனைலார்சின் ஆக்சைடு

பீனைலார்சின் ஆக்சைடு (Phenylarsine oxide) என்பது ஒரு கரிம உலோகச் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று கட்டமைப்பு C6H5–As=O ஆகும். மையத்தில் உள்ள ஆர்சனிக் அணுவுடன் ஒரு பீனைல் தொகுதியும் ஓர் ஆக்சிசன் அணுவும் பிணைக்கப்பட்டுள்ளன.கரிமச்சேர்மங்களைப் பொருத்தவரை ஆர்சனிக் அணுக்கள் தயோல்களில் உள்ள கந்தக அணுக்கள் மீது உயர்நாட்டம் கொண்டவையாக இருக்கும். மிகக்குறிப்பாக, புரதம் கட்டமைப்புகளில் உள்ள விசினைல் சைசுடீன் எச்சங்களுடன் சேர்ந்து நிலைப்புத் தன்மை கொண்ட அணைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. இவ்விளைவு, ஈதல் தொகுதி-ஏற்பி பிணைப்பு ஆய்வுகளை மேற்கொள்வதில் மிகுந்த பயனளிப்பதாக உள்ளது.[1][2] . நிறச்சாரல் படிவுமுறைப் பிரிகையில், பீனைலார்சின் ஆக்சைடின், பிசினின் மீதான இயக்கத்தைத் தடுப்பதிலும் இந்த பிணைப்பு ஈர்ப்பு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. ஒற்றை சைசுடீன் எச்சங்களை விட[3] அல்லது சைசுடீன் ( இணை சைசுடீன் எச்சங்கள் – இருசல்பைடு பாலம்) விசினைல் சைசுடீன் அமைப்புகளுக்கு இச்சேர்மம் உயர் தெரிவுத்திறம் மிக்கதாக விளங்குகிறது.[4]

பீனைலார்சின் ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சோ(பீனைல்)ஆர்சீன்
வேறு பெயர்கள்
பீனைல் ஆர்சீனாக்சைடு; ஆக்சோ(பீனைல்)ஆர்சேன்
இனங்காட்டிகள்
637-03-6
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • c1ccc(cc1)[As]=O
பண்புகள்
C6H5AsO
வாய்ப்பாட்டு எடை 168.03 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Verspohl, EJ (2006). "Effect of PAO (phenylarsine oxide) on the inhibitory effect of insulin and IGF-1 on insulin release from INS-1 cells". Endocr J. 53 (1): 21–26. doi:10.1507/endocrj.53.21. பப்மெட்:16543668. 
  2. Gerhard, R; John, H; Aktories, K; Just, I (2003). "Thiol-modifying phenylarsine oxide inhibits guanine nucleotide binding of Rho but not of Rac GTPases". Mol Pharmacol. 63 (6): 1349–1355. doi:10.1124/mol.63.6.1349. பப்மெட்:12761345. 
  3. Shi, W; Dong, J; Scott, RA; Ksenzenko, MY; Rosen, BP (1996). "The role of arsenic-thiol interactions in metalloregulation of the ars operon". J Biol Chem. 271 (16): 9291–9297. doi:10.1074/jbc.271.16.9291. பப்மெட்:8621591. 
  4. Foley, TD; Stredny, CM; Coppa, TM; Gubbiotti, MA (2010). "An improved phenylarsine oxide-affinity method identifies triose phosphate isomerase as a candidate redox receptor protein". Neurochem Res. 35 (2): 306–314. doi:10.1007/s11064-009-0056-z. பப்மெட்:19731017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனைலார்சின்_ஆக்சைடு&oldid=2102126" இலிருந்து மீள்விக்கப்பட்டது