பீமா நாயக்

1857 விடுதலைப் போராட்ட புரட்சியாளர்

பீமா நாயக் (Bhima Nayak) 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில்[1] ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய ஓர் இந்தியப் புரட்சியாளராவார். [2] பிமா நாயக் என்ற பெயராலும் அழைக்கப்படும் இவர் 1876 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 26 அன்று இறந்தார். பீமா பிரித்தானிய அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டபோது இவர் போர்ட் பிளேர் மற்றும் நிக்கோபார் சிறைகளில் வைக்கப்பட்டார். பின்னர் நாயக் 1876 ஆம் ஆண்டு திசம்பரில் போர்ட் பிளேரில் தூக்கிலிடப்பட்டார். [3] மத்தியப்பிரதேசத்தின் இராபின் ஊட் என்றும் இவர் அழைக்கப்பட்டார். [4]

பீமா நாயக்
Bhima Nayak
பிறப்புபர்வானி மாவட்டம், மத்தியப் பிரதேசம்
இறப்பு29 திசம்பர் 1876
போர்ட் பிளேர்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஇந்திய சுதந்திரப் போரில் போராடினார்.

மத்திய பிரதேசத்தில் சாகீத் பீமா நாயக் பரியோச்சனா என்ற அரசாங்கத் திட்டம் இவரை சிறப்பிக்கும் வகையில் பெயரிடப்பட்டது. [5] முதல்வர் சிவராச் சிங் சவுகான் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் நாளன்று பட்வானி மாவட்டத்தின் தாபா பாவி கிராமத்தில் ஒரு பீமா நாயக் நினைவுச்சின்னத்தை நிறுவி அர்ப்பணித்தார். [6]

மேலும் வாசிக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "हाथ लगा निमाड़ के रॉबिनहुड भीमा नायक का मृत्यु प्रमाण-पत्र" (in Hindi). Naidunia.jagran.com. 31 October 2014. https://naidunia.jagran.com/special-story-bhima-nayak-death-certificate-found-213957. 
  2. "Bheema Nayak statue relates his tale of valour". The Free Press Journal. February 21, 2016. https://www.freepressjournal.in/cmcm/bheema-nayak-statue-relates-his-tale-of-valour/786262. 
  3. Shukla, Pankaj (August 14, 2016). "इस क्रांतिकारी ने छुड़ाए थे अंग्रेजों के छक्के, खुश होकर तात्या टोपे ने किया था खून से तिलक" (in Hindi). News18. https://hindi.news18.com/photogallery/martyr-bheema-nayaks-real-story-902876.html. 
  4. "Western Nimad's sons also fought during 1857 revolt". OneIndia. May 15, 2007. https://www.oneindia.com/2007/05/14/western-nimads-sons-also-fought-during-1857-revolt-1179208196.html. 
  5. "शहीद भीमा नायक परियोजना : बांध में आई दरारें भरीं" (in Hindi). Naidunia.jagran.com. 7 June 2016. https://naidunia.jagran.com/madhya-pradesh/barwani-bhima-nayak-pariyojna-barwani-753300. 
  6. "CM Chouhan dedicates martyr Bhima Nayak Memorial". The Hitavada. 22 January 2017 இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181128075416/http://thehitavada.com/Encyc/2017/1/22/CM-Chouhan-dedicates-martyr-Bhima-Nayak-Memorial.aspx. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமா_நாயக்&oldid=3221587" இலிருந்து மீள்விக்கப்பட்டது