பீர் முகமது சாகிபு

பீர் முகமது சாகிபு என்பவர் இசுலாமிய தமிழ் இலக்கியவாதி ஆவார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ள ஞானமாமேதை பீர்முகம்மது அப்பா தர்ஹாவிற்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, கேரள பக்தர்களும் வந்து செல்கின்றனர். இங்கு அடக்கப்பட்டிருக்கும் மெய்ஞானி பீர் முகமது சாகிபு ஒலியுல்லா தென்காசி மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு 18 ஆயிரம் பாடல்களை இயற்றியுள்ளார். ஞானபுகழ்ச்சி, ஞானமணிமாலை, ஞானகுறவஞ்சி, திருநெறி நீதம் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார். சூபி கவிஞரான பீரப்பாவின் நினைவு நாள் விழா இஸ்லாமிய மாதம் ரஜப் 14ம் நாள் வருகின்றது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. குமரி தகவல் பெட்டகம், தினகரன், நாகர்கோவில் பதிப்பு, 2017. பக்கம் 51
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்_முகமது_சாகிபு&oldid=3961326" இலிருந்து மீள்விக்கப்பட்டது