பீ (ஆவண நிகழ்படம்)

பீ என்பது மறுபக்கம் படைப்புக் குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒரு குறு தமிழ் ஆவண நிகழ்படம் ஆகும். இது மதுரை மாநகராட்சிக்கு வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் (தலித்) சேர்ந்த ஒரு பெண் துப்பரவுத் தொழிலாளியான மாரியம்மாளின் ஒரு நாள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தப் பெண் மதுரைக்கு அருகே இருக்கும் ஒரு கோயில் புற வீதியில் மக்கள் கழித்த மலங்களை கூட்டி அள்ளித் துப்புரவு செய்பவர். மனிதர்கள் இவ்வாறு செய்வது இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பானது.

இந்தக் குறு ஆவணப் படம் கையால் மலம் கூட்டுவதற்கு எதிராக சமூக மட்டத்தில் எதிர்ப்பு பலமாவதற்கு உதவியது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "5) Pee (Shit): 26 min; Tamil with English subtitles; 2003". Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ_(ஆவண_நிகழ்படம்)&oldid=3793951" இலிருந்து மீள்விக்கப்பட்டது