புகு ஏற்பளவும் வெளிப்படு ஏற்பளவும்

புகு ஏற்பளவும் வெளிப்படு ஏற்பளவும் (entrance dose and exit dose) தொலை கதிர் மருத்துவத்தின் போது எக்சு அல்லது காமாக் கதிர்கள், உடலின் புறப்பரப்பில் விழுந்து உட்சென்று புற்று உயிரணுக்களுக்குத் திட்டமிட்ட அளவு ஏற்பளவினைக் கொடுத்து, பின் மறுபக்கம் வெளிப்படுகிறது. கதிர்கள் உட்புகும் பரப்பிலுள்ள கதிர் ஏற்பளவு, புகு ஏற்பளவு என்றும், கதிர்கள் வெளிப்படும் பரப்பிலுள்ள கதிர்ஏற்பளவு, வெளிப்படு ஏற்பளவு என்றும் அறியப்படும். புற்று உயிரணுக்கள் பெறும் அளவு, கதிர் ஏற்பளவு ஆகும.குறைந்த ஆற்றலுள்ள கதிர்களுக்கு கதிர்கள் புகும் பரப்பில் ஏற்பளவு 100 % என்று கொள்ளப்படுகிறது.ஆழ விழுக்காட்டு ஏற்பளவு அட்டவணையின் துணையுடன் ,புற்றுநோய் எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்று தெரிந்து, அட்டவணையின் துணையுடன் புற்று ஏற்பளவு கணக்கிடப்படுகிறது.இந்த அட்டவணையின் மூலம் வெளிப்படு ஏற்பளவினையும் தெரிந்து கொள்ளமுடியும்.அதிக ஆற்றலுள்ள கதிர்களுக்கு உச்சக்கதிர் ஏற்பளவு பறபரப்பிற்கு சற்று அடியில் காணப்படும்.ஏற்புடைய அட்டவணையின் உதவியுடன் பிற இடங்களில் ஏற்பளவினைக் காணலாம்.