புகையிலை பசை மேற்பூச்சு
புகையிலை பசை மேற்பூச்சு (Topical tobacco paste) என்பது சில நேரங்களில் வீடுகளில் கையாளப்படும் ஒரு விசக்கடி சிகிச்சையாகும். இது குளவி, தீ எறும்பு, தேள் அல்லது தேனீ கொட்டுவதற்கு எதிராகப் பரிந்துரைக்கப்படுகிறது.[1] புகையிலை பசையினை கடிபட்ட இடத்தின் மீது மேற்பூச்சாகப் பூசுவதால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது. ஆனால் இச்செயல்பாட்டிற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் அதிகம் இல்லை.[2] சுமார் 2 சதவிகித மக்களுக்கு, ஒவ்வாமை எதிர்வினைகள் உயிருக்கு ஆபத்தானவையாக இருப்பதால் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Beverly Sparks, "Stinging and Biting Pests of People" பரணிடப்பட்டது 2007-02-14 at the வந்தவழி இயந்திரம் Extension Entomologist of the University of Georgia College of Agricultural & Environmental Sciences Cooperative Extension Service.
- ↑ Glaser, David. "Are wasp and bee stings alkali or acid and does neutralising their ph them give sting relief?". www.insectstings.co.uk. Archived from the original on 2007-06-26. பார்க்கப்பட்ட நாள் 2007-05-03.