புகையூட்டம்
புகையூட்டம் (Fumigation) என்பது ஒட்டுண்ணி மற்றும் தொற்றுயிரிக் கட்டுப்பாட்டு முறைகளுள் ஒன்று. புகை மூலம் ஒட்டுண்ணி உயிரிகள் மூச்சுத் திணறி இறக்கின்றன. மனித வாழ்விடங்கள், தானியக் கிடங்குகள் ஆகியவற்றில் இம்முறை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
பிளேக் நோய்க் கட்டுப்பாட்டு முறைகளுள் எலி வளைகளில் புகையூட்டம் செய்வது முக்கியமான ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் மாடுகளில் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் மடிய ஈரவைக்கோல் மூலம் தொழுவத்தில் புகையூட்டம் போடுவது இன்று வரை வழக்கத்தில் உள்ளது.