புக்கிட் பாத்தோக்

புக்கிட் பாத்தோக் நியூ டவுன் என்பது சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பகுதி. புக்கிட் பாத்தோக் சாலை, பழைய ஜுரோங் சாலை, புக்கிட் திமா சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

பிரிவுகள் தொகு

இது எட்டு பிரிவுகளைக் கொண்டது.

பெயர்க் காரணம் தொகு

 
Top மேற்குப் பகுதியின் தோற்றம்

புக்கிட் என்ற மலாய மொழிச் சொல்லுக்கு மலை என்று பொருள். பாத்தோக் என்ற சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளன. இங்கு தென்னை மரங்கள் அதிகம் இருந்ததாகவும், அதனால் தென்னையைக் குறிக்கும் ஜாவனீய சொல்லான பாத்தோக் என்ற பெயர் இடப்பட்டதாகவும் கூறுவர். இங்கு கிரானைட் அதிகம் இருந்ததாகவும், அதைக் குறிக்கும் பத்து என்ற மலாயச் சொல்லே மருவி, பத்தோக் என்றானது என சீனர்கள் நம்புகின்றனர்.

அரசியல் தொகு

புக்கிட் பாத்தோக்கின் பெரும்பகுதி ஜூரோங் குழுத் தொகுதிக்கு உட்பட்டது. புக்கிட் பாத்தோக்கின் வடக்கு, மத்தியப் பகுதிகள் சுவா சு கங் குழுத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கிருந்து நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஊடகம் தொகு

மீடியாகார்ப் நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகள் இங்கிருந்தே ஒளிபரப்பப்படுகின்றன. சேனல் 5, வசந்தம், ஓக்டோ உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கன.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_பாத்தோக்&oldid=3690928" இலிருந்து மீள்விக்கப்பட்டது