புசபாட்டி அசோக் கசபதி ராசு
இந்திய அரசியல்வாதி
(புசாபதி அசோக் கசபதி ராசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அசோக் கஜபதி ராஜு (Pusapati Ashok Gajapati Raju) தற்போதைய இந்திய அரசில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார்.[1]. இவரது வயது 62. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். 1978ல், ஜனதா கட்சி எம்.எல்.ஏ.,வானார். பின் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 1983 முதல் தொடர்ந்து, 36 ஆண்டுகள், எம்.எல்.ஏ., பதவி வகித்தவர். இம்முறை ஒய்.எஸ்.ஆர்., காங்., வேட்பாளர் குமார கிருஷ்ண ரங்கராவை, 90,488 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று, முதன் முறையாக எம்.பி.,யாகி உள்ளார். விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் வென்றுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய குழுவில் உறுப்பினராக உள்ளார். இவரது தந்தை விஜய ராம கஜபதி ராஜுவும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.