புட்டா ரேணுகா
புட்டா ரேணுகா (Butta Renuka) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச மேனாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். இவரது கணவர் பட்டா நீலகண்டம் யுவஜன ஸ்ரமிகா ரிது காங்கிரசு கட்சித் தலைவர் ஆவார். சுமார் 300 கோடிக்கும் அதிகமான மொத்த சொத்துக்களைக் கொண்ட பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[1]
புட்டா ரேணுகா | |
---|---|
மக்களவை உறுப்பினர்-கர்நூல் மக்களவைத் தொகுதி, ஆந்திரப்பிரதேசம் | |
பதவியில் 2014–2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூன் 1971 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | புட்டா நீலகண்டம் |
கல்வி | டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் |
கல்வி
தொகுபுட்டா ரேணுகா நெல்லூரைச் சேர்ந்தவர். இவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
தொழில்
தொகு2014ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ரேணுகா ஆந்திராவிலிருந்து வெற்றி பெற்றார். 01 செப்டம்பர் 2014 அன்று, பெண்கள் அதிகாரமளித்தல் குழு, கிராமப்புற மேம்பாட்டுக்கான நிலைக்குழு, ஆலோசனைக் குழு மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உறுப்பினராக ஆனார். 2015ஆம் ஆண்டில் மத்திய சமூக நல வாரியத்தின் பொதுக்குழு உறுப்பினராக ஆனார். 2017ஆம் ஆண்டில், இவர் மத்திய மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஆனார்.[2]
ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சி சார்பில் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் யெம்மிகானூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Butta Renuka: Age, Biography, Education,Husband, Caste, Net Worth & More - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). Archived from the original on November 30, 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
- ↑ "BUTTA RENUKA : Bio, Political life, Family & Top stories". The Times of India. Archived from the original on October 14, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
- ↑ "MSN". www.msn.com. பார்க்கப்பட்ட நாள் 2024-03-23.
- ↑ ilyas, md (2024-02-03). "YSRC Releases Sixth List With 10 Names Woman Advocate to Contest Narasapuram LS Poll". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-23.