புட்டிரெட்டிப்பட்டி சோமேசுவரர் கோயில்

புட்டிரெட்டிப்பட்டி சோமேசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் புட்டிரெட்டிப்பட்டி என்ற சிற்றூரில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். [1]

கோயில் வரலாறு தொகு

இக்கோயில் புட்டிரெட்டிப்பட்டிக்கு அருகில் உள்ள தாழைநத்தத்தில் விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் இக்கோயில் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில் இருந்ததாகவும், இதனால் இக்கோயிலை அப்படியே பெயர்த்தெடுத்து, தாழைநத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டியில் அதே அமைப்பில் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2] இக்கோயிலில் விசயநகர மன்னனான இம்மிடி நரசிம்மன் காலத்தியக் கல்வெட்டு (கி.பி.1501) உள்ளது.

கோயிலமைப்பு தொகு

சோமேஸ்வரர் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், சோமசுந்தரி ஆலயம் ஆகியவற்றைக் கொண்ட கோயிலாகும். கோயில் மகாமண்டபத்தில் தெற்கே விநாயகரும், வடக்கே முருகனும் உள்ளனர். பரிவார தெய்வங்களாக விநாயகர், காலபைரவர், சூரியன், சந்திரன், ஆகிய தெய்வங்கள் உள்ளனர். அம்பிகை ஆலயம் சோமசுந்தரி என்ற பெயரில் தனியே சிவனின் இடதுபுறம் கிழக்கு நோக்கி உள்ளது. சோமச்சுந்தரி ஆலயம் திருவுணாணாழி, இடைநாழி, மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு உள்ளது. இக்கோயிலில் சிவலிங்கத்துக்கு அருகில் ஒரு பெரிய பாம்புப் புற்று உள்ளது. இந்தப் புற்றில் பால் வார்த்து நாகபூஜை செய்ய, நாக தோஷங்கள் நீங்கி புத்திரபாக்கியம் உண்டாகிறது என்று மக்கள் நம்புகின்றனர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "100 ஆண்டுகளுக்கு பின்னர் அதிசய நிகழ்வு :கோயில்களில் சிறப்பு வழிபாடு". செய்தி. தினகரன். 2 ஆகத்து 2016. Archived from the original on 2022-10-19. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2016.
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 112. 
  3. "நாகதோஷம் விலக ஒரு கோயில்". கட்டுரை. http://www.nilacharal.com. 22 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2016. {{cite web}}: External link in |publisher= (help)