புட்டுத் தோப்பு, மதுரை

புட்டுத் தோப்பு இந்தியா நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரப்பாளையத்திற்கு மேற்கில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது. திருவிளையாடல் புராணத்தில் உள்ள சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா நடத்துவதற்காக, இந்த மண்டபம் 16 ஆம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்ட நாயக்கர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் ஆகும். இந்த மண்டபம் வைகைக் கரை ஓரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா இங்கு நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-22. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்டுத்_தோப்பு,_மதுரை&oldid=3701077" இலிருந்து மீள்விக்கப்பட்டது