புணர்ச்சிப் பரவசநிலையின்மை
புணர்ச்சிப் பரவச நிலையின்மை (Anorgasmia) என்பது போதுமான தூண்டல் தரப்பட்டும் புணர்ச்சியின் போது பரவசநிலையை எய்த இயலாமை ஆகும். இது மனநல நோய்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டாலும் பெரும்பாலும் இது மருத்துவ காரணங்களாலேயே (medical causes) உண்டாகிறது.[1][2][3]
புணர்ச்சிப் பரவசநிலையின்மை | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உளநோய் மருத்துவம், counselling, மருத்துவச் சிகிச்சை உளவியல், மகளிர் நலவியல் |
ஐ.சி.டி.-10 | F52.3 |
ஐ.சி.டி.-9 | 302.73, 302.74 |
நோய்களின் தரவுத்தளம் | 23879 |
ஈமெடிசின் | article/295376 article/295379 |
முதல் நிலை பரவசமின்மை
தொகுவாழ்நாளில் ஒரு முறை கூட உச்ச கட்டமாகிய பரவச நிலையை எய்தாதவர்கள். பெண்களில் அதிகம் காணப்படும் இது ஆண்களில் அதுவும் இளம் ஆண்களில் மிக அரிதான ஒன்று.
இரண்டாம் நிலை பரவசமின்மை
தொகுஇவர்கள் முன்னம் பரவசநிலை அனுபவித்தவர்கள். சில காரணங்களால் தற்போது அனுபவிக்க இயலாதவர்கள்.
காரணங்கள்
தொகு- மதுப்பழக்கம்
- மன அழுத்தம் (depression)
- இடுப்பெலும்பு பாதிக்கப்பட்ட நிலை (Pelvic surgery)
- மாதவிடாய் நிறுத்தம் - மாதவிடாய் முடிந்த நிலை (menopause)
- சுக்கிலத்தை அகற்றும் அறுவைச் சிகிச்சை (Prostate Removal) (ஆண்குறிக்குச் செல்லும் நரம்புகளும் அகற்றப்படுவதால்)
- சர்க்கரை நோயால் விளைந்த நரம்பு பாதிப்பு (Diabetic Neuropathy)
- முள்ளந்தண்டுவட பாதிப்பு (Spinal cord lesions)
- உறுப்பழிவு (Genital mutilation)
சூழ்நிலை பரவசமின்மை
தொகுஇவர்கள் சில குறிப்பிட்ட சூழல்களில் (situational) மட்டும் பரவசமெய்த இயலாதவர்கள். எடுத்துக்காட்டாக சில ஆண்கள் (quad honc) மனைவியைத் தவிர பிற பெண்களிடம் பரவசமெய்துவார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nolen-Hoeksema, Susan (2014). Abnormal Psychology Sixth Edition. New York, NY: McGraw-Hill Education. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-803538-8.
- ↑ "Sexual Effects of Parkinson's | APDA". American Parkinson Disease Association (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
- ↑ For Women Only, Revised Edition: A Revolutionary Guide to Reclaiming Your Sex Life by Berman, J. Bumiller, E. and Berman L. (2005), Owl Books, NY. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8050-7883-1