புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி ஒரு தமிழ் நீதி நூல். ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திசூடியைப் போன்றே நல்ல அறிவுரைகளுடன் சுப்பிரமணிய பாரதியாரால் 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆத்திச்சூடியைப் போன்றே இதன் அமைப்பு உள்ளது. மொத்தம் 110 அறிவுரைகள் உள்ளன. இவை எளிதில் மனப்பாடம் செய்து கொள்ளும் சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்துள்ளன.இவரைத் தொடர்ந்து பாரதிதாசன்-ஆத்திசூடி, வ.சுப.மாணிக்கம்-தமிழ்சூடி,வாணிதாசன்,சுத்தானந்த பாரதி,டாக்டர் ந.சஞ்சீவி, மு.வரதராசன்ஆகியோரின் புதிய ஆத்திசூடி,ந.ரா.நாச்சியப்பன்-நெறிசூடி,ச.மெய்யப்பன்-அறவியல்சூடி,தமிழண்ணல்-ஆய்வுசூடி,ரெ.முத்துகணேசன்-முத்துசூடி,புலவர் சோ.ம.இளவரசு-நீதிசூடி என எழுதியுள்ளனர்.

ஆத்திசூடி, புதியஆத்திசூடி ஓர் ஒப்பீடுதொகு

ஆத்திசூடி ஆன்மீகப் பண்பு கொண்ட ஒழுக்கம் பற்றியதாக அமைய புதிய ஆத்திசூடி வீரமும் வீறும் உடையதான ஒழுக்கத்தை பேசுவதாயுள்ளது.

எ.கா:

ஆத்திசூடிதொகு

 1. அறம் செய விரும்பு
 2. ஆறுவது சினம்
 3. இயல்வது கரவேல்
 4. ஈவது விலக்கேல்
 5. உடையது விளம்பேல்
 6. ஊக்கமது கைவிடேல்
 7. எண் எழுத்து இகழேல்
 8. ஏற்பது இகழ்ச்சி
 9. ஐயம் இட்டு உண்
 10. ஒப்புரவு ஒழுகு
 11. ஓதுவது ஒழியேல்
 12. ஔவியம் பேசேல்

புதியஆத்திசூடிதொகு

1. அச்சம் தவிர்

2. ஆண்மை தவறேல்

3. இளைத்தல் இகழ்ச்சி

4. ஈகை திறன்

5. உடலினை உறுதிசெய்

6. ஊண் மிக விரும்பு

7. எண்ணுவது உயர்வு

8. ஏறுபோல் நட

9. ஐம்பொறி ஆட்சிகொள்

10. ஒற்றுமை வலிமையாம்

11. ஓய்தல் ஒழி

12. ஔடதம் குறை சில எடுத்துக்காட்டுகள்: அனைவரும் உறவினர்-பாரதிதாசன் அகத்தமிழ் படி-வ.சுப.மாணிக்கம் ஙவ்வினம் போல் இரேல்-ந.ரா.நாச்சியப்பன் எழுத்தாளரைப் போற்று-ச.மெய்யப்பன்

வெளி இணைப்புகள்தொகு

புதிய ஆத்திசூடிதொகு

 1. அச்சம் தவிர் 
 2. ஆண்மை தவறேல்
 3. இளைத்தல் இகழ்ச்சி
 4. ஈகை திறன்
 5. உடலினை உறுதிசெய்
 6. ஊண்மிக விரும்பு
 7. எண்ணுவது உயர்வு
 8. ஏறுபோல் நட
 9. ஐம்பொறி ஆட்சிகொள்
 10. ஒற்றுமை வலிமையாம்
 11. ஓய்த லொழி
 12. ஓளடதங் குறை
 13. கற்ற தொழுகு
 14. காலம் அழியேல்
 15. கிளைபல தாங்கேல்
 16. கீழோர்க்கு அஞ்சேல்
 17. குன்றென நிமர்ந்து நில்
 18. கூடித் தொழில் செய்
 19. கெடுப்பது சோர்வு
 20. கேட்டிலும் துணிந்து நில்
 21. கைத்தொழில் போற்று
 22. கொடுமையை எதிர்த்து நில்
 23. கோல்கைக் கொண்டு வாழ்
 24. கவ்வியதை விடேல்
 25. சரித்திரத் தேர்ச்சிகொள்
 26. சாவதற்கு அஞ்சேல்
 27. சிதையா நெஞ்சு கொள்
 28. சீறுவோர்ச் சீறு
 29. சுமையினுக்கு இளைத்திடேல்
 30. சூரரைப் போற்று
 31. செய்வது துணிந்து செய்
 32. சேர்க்கை அழியேல்
 33. சைகையிற் பொருளுணர்
 34. சொல்வது தெளிந்து சொல்
 35. சோதிடந் தனையிகழ்
 36. சௌரியந் தவறேல்
 37. ஞமலிபோல் வாழேல்
 38. ஞாயிறு போற்று
 39. ஞிமிறென இன்புறு
 40. ஞெகிழ்வ தருளின்
 41. ஞேயங் காத்தல் செய்
 42. தன்மை இழவேல்
 43. தாழ்ந்து நடவேல்
 44. திருவினை வென்று வாழ்
 45. தீயோர்க்கு அஞ்சேல்
 46. துன்பம் மறந்திடு
 47. தூற்றுதல் ஒழி
 48. தெய்வம் நீ என்றுணர்
 49. தேசத்தைக் காத்தல் செய்
 50. தையலை உயர்வு செய்
 51. தொன்மைக்கு அஞ்சேல்
 52. தோல்வியிற் கலங்கேல்
 53. தவத்தினை நிதம் புரி
 54. நன்று கருது
 55. நாளெலாம் வினை செய்
 56. நினைப்பது முடியும்
 57. நீதிநூல் பயில்
 58. நுனியளவு செல்
 59. நூலினைப் பகுத்துணர்
 60. நெற்றி சுருக்கிடேல்
 61. நேர்படப் பேசு
 62. நையப் புடை
 63. நொந்தது சாகும்
 64. நோற்பது கைவிடேல்
 65. பணத்தினைப் பெருக்கு
 66. பாட்டினில் அன்பு செய்
 67. பிணத்தினைப் போற்றேல்
 68. பீழைக்கு இடங்கொடேல்
 69. புதியன விரும்பு
 70. பூமி இழந்திடேல்
 71. பெரிதினும் பெரிது கேள்
 72. பேய்களுக்கு அஞ்சேல்
 73. பொய்மை இகழ்
 74. போர்த் தொழில் பழகு
 75. மந்திரம் வலிமை
 76. மானம் போற்று
 77. மிடிமையில் அழிந்திடேல்
 78. மீளுமாறு உணர்ந்துகொள்
 79. முனையிலே முகத்து நில்
 80. மூப்பினுக்கு இடங் கொடேல்
 81. மெல்லத் தெரிந்து சொல்
 82. மேழி போற்று
 83. மொய்ம்புறத் தவஞ் செய்
 84. மோனம் போற்று
 85. மௌட்டியந் தனைக் கொல்
 86. யவனர்போல் முயற்சிகொள்
 87. யாரையும் மதித்து வாழ்
 88. யௌவனம் காத்தல் செய்
 89. ரஸத்திலே தேர்ச்சிகொள்
 90. ராஜஸம் பயில்
 91. ரீதி தவறேல்
 92. ருசிபல வென்றுணர்
 93. ரூபம் செம்மை செய்
 94. ரேகையில் கனி கொள்
 95. ரோதனம் தவிர்
 96. ரௌத்திரம் பழகு
 97. லவம் பல வெள்ளமாம்
 98. லாகவம் பயிற்சி செய்
 99. லீலை இவ் வுலகு
 100. (உ)லுத்தரை இகழ்
 101. (உ)லோக நூல் கற்றுணர்
 102. லௌகிகம் ஆற்று
 103. வருவதை மகிழ்ந்துண்
 104. வானநூற் பயிற்சிகொள்
 105. விதையினைத் தெரிந்திடு
 106. வீரியம் பெருக்கு
 107. வெடிப்புறப் பேசு
 108. வேதம் புதுமை செய்
 109. வையத் தலைமை கொள்
 110. வௌவுதல் நீக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_ஆத்திசூடி&oldid=2937315" இருந்து மீள்விக்கப்பட்டது