புதுக்கோட்டை அபர்ணா கொலை வழக்கு

புதுக்கோட்டையில் பதின் வயது மாணவி அபர்ணா 2011 மார்ச் மாதம் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார். இன்று வரை முடிவு ஏதும் இல்லாமல் இந்த வழக்கு நீடிக்கிறது.

பாதிக்கப்பட்டவர் விபரம்

தொகு
  • பெயர்: அபர்ணா
  • வயது: 15
  • பெற்றோர்: கலைக்குமார் (தலைமை ஆசிரியர், பிரஹதாம்பாள் பள்ளி) ராஜம் (ஆசிரியை சந்தைப்பேட்டை பள்ளி)
  • படிப்பு: வைரம்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு

வழக்கின் கால வரிசை

தொகு

மார்ச் 9, 2011 வெள்ளிக்கிழமை:

தொகு

15 வயதுப் பெண் கே. அபர்ணா புதுக்கோட்டை டவுன் சத்திய மூர்த்தி நகரில் அவரது இல்லத்தில் கொலையுண்டு கிடக்கிறார். வலியை ஏற்படுத்தும் காயங்களுடன் பிரேதம் கண்டெடுக்கப்பட்டதாகவும், வீட்டில் நகைகள் திருடு போயிருப்பதாகவும் போலீஸ் சொன்னதாக தி இந்து செய்தி சொல்கிறது. சம்பவ இடத்தை எஸ்பி எம் எஸ் முத்துச்சாமி பார்வையிட்டுள்ளார். கொலை வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன. வக்கீல்கள் கோர்ட்டுகளைப் புறக்கணித்தார்கள். ஆசிரியர்கள் மற்றும் தி இந்து செய்தி

அவரது பிரேதம் படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்கில் போடப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த அன்று தன் இளைய சகோதரருடன் தனியாக இருந்திருக்கிறார். 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.

,மார்ச் 13, 2011:

தொகு

கணேஷ் நகர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வந்தனர். 9 மாதமாகியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாதபடியால் மெட்ராஸ் ஹை கோர்ட் பெஞ்ச் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. நீதிமன்றம் இவ்வழக்கை தஞ்சாவூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டரிடம் துரிதப்படுத்த ஒப்படைத்தது. Madras High Court K.Kalaikumar vs The State Of Tamil Nadu on 13 December, 2011

மார்ச் 30, 2013:

தொகு

அபர்ணாவின் பெற்றோரைச் சந்தித்த சிபிசிஐடி அதிகாரி எம் என் மஞ்சுநாதா வழக்கை சீக்கிரம் விசாரிப்போம் என்று ஆறுதல் கூறுகிறார். டைம்ஸ் ஆப் இந்தியாவின் இந்த செய்தி அபர்ணா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக சொல்கிறது.

செப்டம்பர் 27 2013:

தொகு

உள்ளுர் குற்றப்பிரிவின் விசாரணையில் திருப்தி அடையாத மெட்ராஸ் ஹைகோர்ட்டின் மதுரை பெஞ்ச் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

நீதியரசர் ஏ செல்வம் முன்னிலையில் வாதியின் வக்கீல் வாதிட்டது:

  • வழக்கு விசாரணை துரிதப்படுத்த சிபிசிஐடிக்கு கோர்ட் மாற்றினாலும் எந்த மாற்றமும் இல்லை என்றும், வழக்கு விசாரணையில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
  • மோப்பநாய் கவிவேந்தன் த/பெ கவிதைப் பித்தன் (முன்னாள் திமுக எம் எல் ஏ) வீட்டினுள் நுழைந்தது. அடையாள அணிவகுப்பில் கவிவேந்தனை வாதியின் மைந்தன் அடையாளம் காட்டினார்
  • என்கிற போதிலும் போலீஸ் பக்கமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை
  • செயலற்று இருக்கும் சிபிசிஐடி மாநில போலீசின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது

சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் என் செந்தில்குமார் பதில்:

  • 130 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்
  • 40 பேரின் கைரேகைகள் பெறப்பட்டுள்ளன
  • 11 பேரின் தொலைபேசி விபரங்கள் ஆராயப்பட்டுள்ளன (முன்னாள் திமுக எம் எல் ஏ கவிதைப்பித்தன், அவரது மகன்கள் கவிவேந்தன், இசைவேந்தன், சரவணன்)
  • ஷாகுல் அமீது (அபர்ணாவை பள்ளியில் தினசரி விடும் ஆட்டோ ஓட்டுநர்),
  • மொகமது ஹனீபா (அபர்ணாவின் தாயாரை பள்ளியில் ஆட்டோவில் விடுபவர்),
  • கவிவேந்தன்,
  • இசைவேந்தன்,
  • வெளிச்சி த/பெ ஜனார்தனன் SSI SB-CID புதுக்கோட்டை
  • சின்னராசு (அந்தப் பகுதி சந்தேகக் குற்றவாளி)

ஆகியோர் சிறப்புப் படையின் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் எல் சரவணன் குறிப்பு

மார்ச் 6 2014:

தொகு

போஸ் நகரைச் சேர்ந்த ஆர் சாமிநாதன் கொலை செய்யப்பட்டார். ஆர் சாமிநாதன் புதுக்கோட்டையின் தனியார் எரிவாயு ஏஜென்சியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் பணி செய்து வந்தார். இவர்தான் அபர்ணாவின் பிரேதத்தை முதலில் பார்த்தவர். [http://timesofindia.indiatimes.com/city/trichy/Witness-in-sensational-murder-case-found-dead/articleshow/31507629.cms Witness in sensational murder case found dead-ToI)

ஜுலை 20, 2015

தொகு

மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரைவில் குற்ற வாளிகள் பிடிபடுவர் - சிபிஐ.

புதுக்கோட்டை பள்ளி மாணவி கொலை வழக்கில் திணறும் சிபிஐ: 5 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் பிடிபடவில்லை

சில விபரங்கள்

தொகு