புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி எனும் இக்கட்டுரை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வி நிலையைப் பற்றிக் கூறுகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வியறிவு வீதம் 2011 கணக்கெடுப்பின்படி 77.76% ஆகும்[1].இது 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருத்து 6.64% அதிகரித்துள்ளது 2001 தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின் படி புதுக்கோட்டை மாவட்ட கல்வியறிவு விதம் 71.12% ஆகும்) . இவ்வீதம் மாநில சராசரியை (80.33%) விட குறைவாகும்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,புதுக்கோட்டை

கல்வி நிறுவனங்களில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை

தொகு

2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு[2]

வரிசை எண் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம் ஆண் ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்கள் மொத்தம்
1 கலை அறிவியல் கல்லூரிகள் 5404 12479 17883 295 437 732
2 பொறியியற் கல்லூரிகள் 9460 4273 13669 619 418 1037
3 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 11608 965 12255 641 279 920
4 கல்வியியல் கல்லூரிகள் 404 1189 1593 148 105 263
5 வேளாண் கல்லூரிகள் 87 92 179 12 9 21
6 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 32 449 481 45 25 70
7 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் 33 199 232 2 14 16
8 தொடக்கப்பள்ளிகள் 30070 29469 59539 1176 1688 2864
9 நடுநிலைப்பள்ளிகள் 24086 22359 46445 1093 1166 2259
10 உயர்நிலைப்பள்ளிகள் 33358 32025 65383 1152 2067 3219
11 மேல்நிலைப்பள்ளிகள் 24086 22359 46445 1093 1166 2259
12 சிறப்புப் பள்ளிகள் 50 35 85 5 14 19
13 தொழிற்பயிற்சி நிலையங்கள் 1160 172 1332 104 16 120
மாவட்டத்தில் மொத்தம் 139838 126065 265521 6385 7404 13799

கல்லூரிக்கல்வி நிறுவனங்களின் விவரம்

தொகு
வரிசை எண் கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை
1 கலை அறிவியல் கல்லூரிகள் 11
2 பொறியியற் கல்லூரிகள் 11
3 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 22
4 கல்வியியல் கல்லூரிகள் 19
5 வேளாண் கல்லூரிகள் 2
6 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 9
7 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் 5

பள்ளிக்கல்வி

தொகு

தொடக்கக்கல்வி நிறுவனங்கள்

தொகு

2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1103 தொடக்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விரம் பின்வருமாறு

வ.எண் தொடக்க்கல்வி நிலையங்கள் எண்ணிக்கை மாணவர்கள் எண்ணிக்கை ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆசிரியர் மாணவர் விகிதம்
1 அரசுத் தொடக்கப்பள்ளிகள் 4 383 13 1-29
2 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் 1019 50582 2521 1-20
3 ஆதி-திராவிடர் தொடக்கப்பள்ளிகள் 10 447 27 1-17
4 நகராட்சி தொடக்கப்பள்ளிகள் 9 1169 44 1-27
5 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் 58 6823 247 1-28
6 அரசுதவி பெறா தொடக்கப்பள்ளிகள் 2 73 10 1-7
7 சமூக நலத்துறை தொடக்கப்பள்ளிகள் 1 62 2 1-31
மொத்தம் 1103 59539 2864 1-21

உயர் தொடக்கக்கல்வி நிறுவனங்கள்

தொகு

2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 324 நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விரம் பின்வருமாறு

வ.எண் தொடக்க்கல்வி நிலையங்கள் எண்ணிக்கை மாணவர்கள் எண்ணிக்கை ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆசிரியர் மாணவர் விகிதம்
1 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 290 38176 1977 1-19
2 நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் 9 1269 56 1-23
3 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் 24 6956 217 1-32
4 அரசுதவி பெறா நடுநிலைப்பள்ளிகள் 1 44 9 1-5
மொத்தம் 324 46445 2259 1-21

உயர்நிலைக்கல்வி நிறுவனங்கள்

தொகு

2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 168 உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விரம் பின்வருமாறு

வ.எண் உயர்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை மாணவர்கள் எண்ணிக்கை ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆசிரியர் மாணவர் விகிதம்
1 அரசு உயர்நிலைப்பள்ளிகள் 102 22559 1149 1-20
2 மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் 2 832 48 1-17
3 உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 15 6463 246 1-26
4 அரசுதவி பெறா உயர்நிலைப்பள்ளிகள் 6 1460 46 1-38
5 ஆதி-திராவிடர் உயர்நிலைப்பள்ளிகள் 2 234 12 1-20
6 மெட்ரிக் உயர்நிலைப்பள்ளிகள் (1-10 வகுப்புகள்) 40 33835 1718 1-20
மொத்தம் 168 65383 3219 1-20

மேல்நிலைக்கல்லி நிறுவனங்கள்

தொகு

2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 155 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் விரம் பின்வருமாறு

வ.எண் மேல்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை மாணவர்கள் எண்ணிக்கை ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆசிரியர்-மாணவர் விகிதம்
1 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 98 71002 1962 1-36
3 உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 17 16726 304 1-55
4 அரசுதவி பெறா மேல்நிலைப்பள்ளிகள் 4 3159 181 1-18
5 ஆதி-திராவிடர் மேல்நிலைப்பள்ளிகள் 1 742 24 1-31
6 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 35 20776 1599 1- 13
மொத்தம் 155 112405 4070 1-28

சிறப்புக்கல்வி நிறுவனங்கள்

தொகு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையில் சிறப்புக் கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் மூன்று உள்ளன.அவையாவன

  1. அரசு செவித்திறன் குறைபாடுடையோர் நடுநிலைப்பள்ளி, புதுக்கோட்டை.
  2. அரசு இசைப்பள்ளி, புதுக்கோட்டை.
  3. அரசு கண்பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளி, புதுக்கோட்டை.

அரசு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டம்

தொகு

வருடந்தோறும் மாநில அரசால் நடத்தப்படுகிறது. அவ்வகையில் 2015-2016 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் பின்வருமாறு

வகுப்பு தேர்ச்சி சதவீதம் மாநிலத்தில் இடம்
பத்தாம் வகுப்பு 94.46 19
பன்னிரெண்டாம் வகுப்பு 93.01 16

மேற்கோள்கள்

தொகு