புதையல் உவமை

புதையல் அல்லது மறந்துள்ள புதையல் இயேசு தனது போதனைகளின் போது விண்ணரசை விளக்குவதற்காக கூறிய உவமானக் கதையாகும். இது மத்தேயு 13:44 இல் எழுதப்பட்டுள்ளது. இது முத்து உவமைக்கு முன்னதாக கூறப்பட்டது. இது ஒருவசனம் மட்டுமேயுள்ள சிறிய உவமையாகும்.

உவமை

தொகு

ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

பொருள்

தொகு

இயேசு விண்ணரசை மறைந்திருக்கும் புதையலுக்கு ஒப்பிடுகிறார். அதை கண்ட மனிதன் போய் தனக்குள்ளதெல்லாவற்றையும் விற்று அந்நிலத்தை விலைக்கு வாங்கி புதியலை அடைகிறான். அதனால் அவன் முன்னரை விட செல்வந்தனாகிறான். அழியக்கூடிய இவ்வுலக செல்வங்களைக் கொண்டு அழியாத விண்ணக செல்வங்களை தேட வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

ஏனைய நூல்கள்

தொகு

விவிலியத்தின் ஏனைய நற்செய்தி நூல்களில் இவ்வுவமை காணப்படுவதில்லை. ஆனாலும் விவிலிய நூலாக ஏற்கப்படாத தோமையாரின் நற்செய்தி நூலில் இதனை ஒத்த உவமை ஒன்று காணப்படுகிறது. இது 109 வது வசனத்தில் கூறப்பட்டுள்ளது. பின்வரும் தோமையாரின் நற்செய்தியின் வசனம் பற்றசன்-மேயர் (Patterson-Meyer) ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கமாகும்.

109. இயேசு கூறியதாவது."(தந்தையின்) அரசு பினவரும் நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்; தனது நிலத்தில் ஒரு புதையல் மறைந்திருந்தும் அதை அம்மனிதன் அறியாமல் இருந்தான். அவன் மரித்தபோது அந்நிலத்தை மகனுக்கு விட்டுச்சென்றான். மகனும் புதையல் பற்றி அறியாது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிடுகிறான். நிலத்தை வாங்கியவனோ நிலத்தை உழும்போது புதையலை கண்டுபிடித்தான். பின்பு அவன் எல்லோருக்கும் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் பெருஞ்செல்வந்தனானான்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு

வெளியிணப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதையல்_உவமை&oldid=3221788" இலிருந்து மீள்விக்கப்பட்டது