புத்தனாவது சுலபம் (சிறுகதைத் தொகுப்பு)
புத்தனாவது சுலபம் என்பது எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பு. உயிர்மை பதிப்பகம் வெளியீடாக இப்புத்தகம் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் 16 சிறுகதைகள் உள்ளன. இப்புத்தகத்தின் பதிப்புரிமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடையது. இத்தொகுப்புகளிலுள்ள சிறுகதைகளில் ஒன்றான புத்தனாவது சுலபம் எனபதுவே இத்தொகுப்பின் பெயராக சூட்டப்பட்டுள்ளது.
நூலாசிரியர் | எஸ். ராமகிருஷ்ணன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | சிறுகதைத் தொகுப்பு |
வெளியீட்டாளர் | உயிர்மை பதிப்பகம் |
பக்கங்கள் | 175 |
ISBN | 978-93-81095-64-5 |
நூல் முன்னுரை
தொகுஇத்தொகுப்பிற்கு முன்னுரையில் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார். சிறுகதை என்பது நீந்திக் கொண்டிருக்கும் மீனைச் சித்திரம் வரைவது போன்றது. அது ஒரு சவால். மீனின் தோற்றத்தை வரைய முயன்றால் அதன் இயக்கம் பிடிபடாமல் போய்விடும். இயக்கத்தை வரைய முற்பட்டால் தண்ணீரின் இயல்பு வெளிப்படாமல் போய்விடும். என்னளவில் சிறுகதை எழுதுவதே எப்போதும் அதிக உத்வேகமும் சவாலும் நிரம்பியதாக இருக்கிறது.
தொகுப்பிலுள்ள சிறுகதைகள்
தொகு- இரண்டு குமிழ்கள்
- புத்தனாவது சுலபம்
- பென் என்று எவருமில்லை
- ஆம் புரூனோ, அவர்கள் குற்றவாளிகளே
- சீட்டாட்டம்
- ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்
- பொய்த் தொண்டை
- நடுவில் உள்ளவள்
- ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பதில்லை
- யட்சன் தனித்திருக்கிறான்
- சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன் சிங்கைப் பிடிக்காது
- பேசும் கற்கள்
- சிறு மீன்( குறுங்கதை)
- சொந்தக்குரல்
- சிற்றறிவு
- கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
பின்னட்டைக் குறிப்புகள்
தொகுபொதுவாக வெளிவரும் எல்லாத் தமிழ் புத்தகங்களிலும் அப்புத்தகத்தின் பின்னட்டையில் சில குறிப்புகள் அச்சிடப்பட்ட்இருக்கும். அவை பொதுவாக அப்புத்தகத்தின் உள்ளே உள்ள கதைகளிலிருந்தோ, கவிதைகளிலிருந்தோ அல்லது கட்டுரைகளிலிருந்தோ சில பகுதிகளாக இருக்கலாம். சில சமயம் எழுத்தாளரின் வாழ்க்கைக் குறிப்புகளாக அமையலாம். இன்னும் சில சமயங்களில் அப்புத்தகத்தைப் பற்றிய பிறருடைய மதிப்புரை அல்லது விமரிசனத்தின் சில பகுதியாக இருக்கலாம். அல்லது அந்த எழுத்தாளர் வேறு எங்காவது வெளிப்படுத்திய அவரது கருத்தாக இருக்கலாம். இத்தகைய குறிப்புகள் பெரும்பாலும் அப்புத்தகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிப்பதில்லை என்ற போதிலும் வாசகர்களை அப்புதகத்தைப் படிக்கத் தூண்டும் விதத்திலேயே அமைந்திருக்கும். இப்புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு...
மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ். ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனதின் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே புறக்கணிப்பின், தனிமையின், அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறுண்ட குடும்பங்களின், உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன. புருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க கதைமொழி, நுட்பமான கதையாடல், வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் சொல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ் சிறுகதை உலகிற்குப் புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன.