புனலாடல் உலகெங்கும் நிகழும் விளையாட்டுகளில் ஒன்று. புனல் என்பது ஓடும் நீர். அது நன்னீர். கடல் போன்று உவர்நீர் அன்று. எனவே இதனை ஆற்றுநீர் விளையாட்டு எனலாம். அருவியாடலும் இதனுள் அடங்கும். புனலாடல் பற்றிச் சங்ககால நூல்களில் பல பாடல்கள் விரிவாகச் சொல்கின்றன.

கொல்லிமலை அருவியில் புனலாடும் காட்சி
தமிழ் நெறி - உடுத்து அலால் நீர் ஆடார் (ஆசாரக்கோவை பாடல் 11) மேலை நாடுகளில் காதலர் அருவியில் புனலாடும் மறையொழுக்கக் காட்சி

அவற்றுள் சில:

அருவியில் மகளிர் தோழியரோடு ஆடுதல்[1], சுனையில் ஆடுதல்[2], ஆடவர் மகளிரொடு சேர்ந்து ஆடுதல்[3], ஒருவன் தன் மனைவியோடும்[4] விரும்பிய ஒருத்தியோடும்[5] ஆடுதல் உண்டு.

இந்த விளையாட்டு ஆடுதல், பாய்தல் என்னும் வினைச்சொற்களால் குறிப்பிடப்படுவதிலிருந்து இதன் விளையாட்டுப் பாங்கை உணரமுடியும். அணிகலன்களைக் கழற்றி வைத்துவிட்டு ஆடினர்.[6] கடலில் ஆடிய பின்னர் உடல் அழுக்கு நீங்கப் புனலாடினர்.[7] காவிரியாற்றுக் கழார்த் துறையில் நடந்த நீச்சல் நடனம் குறிப்பிடத்தக்க ஒன்று. வெண்மணி,[8] தேனூர்[9] துறைகளிலும் புனல் விளையாட்டு நிகழ்ந்த்து. வைகையாற்றுப் புது வெள்ளத்தில் நடந்த புனல் விளையாட்டுப் பற்றிப் பரிபாடல் விரிவாகச் சொல்கிறது.

அடிக்குறிப்பு

தொகு
  1. நற்றிணை 44
  2. நற்றிணை 317, 339, 357, அகம் 302
  3. ஐங்குறுநூறு 64
  4. ஐங்குறுநூறு 72
  5. ஐங்குறுநூறு 71,
  6. ஐங்குறுநூறு 100, பெரும்பாணாற்றுப்படை 311
  7. பட்டினப்பாலை 99, 100
  8. அகம் 246
  9. ஐங்குறுநூறு 54
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனலாடல்&oldid=3488228" இலிருந்து மீள்விக்கப்பட்டது