புனித அந்தோனியார் ஆலயம், கச்சத்தீவு
புனித அந்தோனியார் ஆலயம் அல்லது புனித அந்தோனியார் திருத்தலம் சீனீகுப்பன் படையாட்சி என்பவரால் கச்சத்தீவில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இது ஒரு கத்தோலிக்க தேவாலயமாகும்.[1] இங்கு ஆண்டு தோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வருடாந்த திருவிழா நடைபெற்று வரும். கச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த இருநாட்டு மக்களும் சந்தித்து பொருட்களை பண்டமாற்று செய்ய வழிவகையாக இருந்துள்ளது. இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதித் தீவாக விளங்கிய கச்சதீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்குச் சொந்தமானது.[2]
புனித அந்தோனியார் ஆலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 9°23′0″N 79°31′0″E / 9.38333°N 79.51667°E |
சமயம் | கிறிஸ்தவம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
நிலை | இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் |
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ கச்சத்தீவு அன்றும் - இன்றும் ஏ. எஸ். ஆனந்தன்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131024023539/http://www.thinakkathir.com/?p=2121.