செபஸ்தியார்
புனித செபஸ்தியார் (இறப்பு சுமார். 288) என்பவர் ஆதி கிறித்தவ புனிதரும் மறைசாட்சியும் ஆவார். இவர் உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறித்தவர்களுக்கு எதிராகத் துவங்கிய கொடுமைகளில் இறந்தார். இவர் பெரும்பான்மையாக மரத்திலோ, தூணிலோ கட்டப்பட்டவாறு, அம்புகளால் குத்தப்பட்டு சித்தரிக்கப்படாலும், இவர் அங்கு இறக்கவில்லை. இவரை அங்கிருந்து உரோம் நகரின் ஐரீன் என்பவர் காப்பாற்றி குணப்படுத்தினார். இதன் பின்பு தியோக்கிளேசியனின் செயல்களை இவர் சாடியதால், அரசனின் ஆணைப்படி இவரை தடியால் அடித்துக் கொலை செய்தனர்..[1]
புனித செபஸ்தியார் | |
---|---|
![]() அம்புகளோடு புனித செபஸ்தியார், சுமார். 1525ஆம் ஆண்டு ஓவியம் | |
மறைசாட்சி | |
பிறப்பு | c. 256 |
இறப்பு | c. 288 |
வணங்கும் திருஅவைகள் | கத்தோலிக்க திருச்சபை கிழக்கு மரபுவழி திருச்சபை ஆங்கிலிக்கம் |
திருவிழா | சனவரி 20 (கத்தோலிக்கம்), டிசம்பர் 18 (கிழக்கு மரபுவழி) |
சித்தரிக்கப்படும் வகை | மரத்திலோ, தூணிலோ கட்டப்பட்டவாறு, அம்புகளால் குத்தப்பட்டு |
பாதுகாவல் | படை வீரர்கள், தொற்று நோய்கள், வில் வித்தையாளர்கள், நன் மரணம், விளையாட்டு வீரர்கள் |
இவரின் மறைசாட்சியம் முதன் முதலில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்புரோசு என்னும் மிலன் நகர ஆயரின் திருப்பாடல் 118இன் மறை உரைகளில் (எண் 22) காணக்கிடைக்கின்றது. இதன் படி செபஸ்தியாரின் பக்தி மிலன் நகரின் 4ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது தெரிகின்றது.
கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் சனவரி 20. கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இவரின் விழாவை டிசம்பர் 18இல் சிறப்பிக்கின்றன.