புனித திரித்துவ தேவாலயம், ஏற்காடு

புனித திரித்துவ தேவாலயம், ஏற்காடு இந்தியாவின் தமிழ்நாடு, ஏற்காட்டில் 1834-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1853-ஆம் ஆண்டு ஏற்பட்ட சேதத்திற்குப் பிறகு இந்தத் தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது. இது ஒரு சுதந்திர தேவாலயம் ஆகும். 10 வருடங்களாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கில், தரப்பட்ட இறுதித் தீர்ப்பு அதன் சுதந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.

புனித திரித்துவ ஆங்கிலிகன் தேவாலயம், ஏற்காடு

"இந்திய வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் தந்தை" என்று கருதப்படும் பிரித்தானிய தொல்லியலாளரும் புவியியலாளருமான ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் (1834-1912) அடக்கமான இடமாகும். அவருடைய நினைவுச்சின்னத்தை இங்கு காணலாம். தேவாலயத்தில் பீட்டர் பெர்சிவல் (1803-1882) கல்லறை உள்ளது. அவர் ஒரு சமயப்பணியாளர், மொழியியலாளர் மற்றும் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் ஒரு முன்னோடி கல்வியாளர் ஆவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Subramanian, T (July 8, 2009). "The trail of two British innovators in India". தி இந்து இம் மூலத்தில் இருந்து ஜூலை 12, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090712071555/http://www.hindu.com/2009/07/08/stories/2009070855681100.htm. பார்த்த நாள்: January 2, 2013.