பீட்டர் பெர்சிவல்
கிறித்தவப் பாதிரியார். இந்தியா இலங்கையில் பணியாற்றியவர்
பீட்டர் பெர்சிவல் (Peter Percival, 1803 – சூலை 11, 1882) ஓர் பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளரும், மொழியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில், கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங்கு அகரமுதலியையும், ஆங்கிலம்-தமிழ் அகராதியையும், ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழிகளையும், ஔவையாரின் பாடல்களையும் மொழிபெயர்த்தும் எழுதினார். தெலுங்கிலும், தமிழிலும் தினவர்த்தமணி என்ற இதழை வெளியிட்டார். இவர் சமற்கிருதத்தில் பட்டம் பெற்றவரும் ஆவார். 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள ஏற்காட்டில் இறந்தார்.[1]
பீட்டர் பெர்சிவல் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1803 |
இறப்பு | சூலை 11, 1882 ஏற்காடு, இந்தியா |
பணி | கல்வியாளர், மொழியியலாளர், நற்செய்தி அறிவிப்பாளர் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "The trail of two British innovators in India". தி இந்து. 8 July 2008 இம் மூலத்தில் இருந்து 12 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090712071555/http://www.hindu.com/2009/07/08/stories/2009070855681100.htm.