புனித மேரி தேவாலயம், சென்னை
புனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும்.[1] பொ.ஊ. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன.
புனித மேரி தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டை | |
---|---|
அமைவிடம் | சென்னை, இந்தியா |
புனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது.[1][2]
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ 1.0 1.1 வி. கந்தசாமி (2011 (மூன்றாம் பதிப்பு)). தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். pp. 32 மற்றும் 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-008-6.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ (சுவர் சொல்லும் கதைகள் ). சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2012. p. 139.