புனித யோவான் தேவாலயம், சிக்கந்திராபாத்

சிக்கந்திராபாத் புனித யோவான் தேவாலயம் (St. John's Church, Secunderabad) ஒரு வரலாற்று கட்டிடமாகும். இது 1818ஆம் ஆண்டில் சிக்கந்தராபாத் நகரின் மாரெட்பள்ளியில் கட்டப்பட்டது. 1813ஆம் ஆண்டில் யோவானின் பெயரிடப்பட்டது. இது சிக்கந்திராபாத்திள்ள பழமையான கிறிஸ்தவ தேவாலயம் ஆகும். [1][2]

சிக்கந்திராபாத் புனித யோவான் தேவாலயம்
Stjohnschurchsecunderabad1890.png
சுமார் 1880களில் லாலா தீன் தயாள் என்பவரால் எடுக்கப்பட்ட தேவாலயத்தின் புகைப்படம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
சமயம்கிறிஸ்தவம்
கட்டிடக்கலை தகவல்கள்
நிறைவுற்ற ஆண்டு1818
அளவுகள்

வரலாறுதொகு

இந்த தேவாலயம், பிரித்தானிய இராணுவத் துருப்புக்களுக்காக கட்டப்பட்டது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, செகந்திராபாத்தைச் சேர்ந்த திவான் பகதூர் சேத் ராம் கோபால் தேவாலயத்தின் கட்டுமானத்திற்கும் புதைபடிவங்களுக்கும் நிதியளித்தார். [3] இதை நிர்வகிக்க இலண்டனில் இருந்து திருத்தந்தைகள் பணியமர்த்தப்பட்டனர். கன்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் மட்டுமே தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட காலமாக, குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் மட்டுமே நுழைந்தனர்.

இந்த தேவாலயம் கிறிஸ்துவின் சிலுவையின் வடிவத்தில் உள்ளது. இது இந்திய-ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. [4] தேவாலயத்தின் உள்ளே யங்கோன் தேக்கு மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட சுமார் 30 அடி நீளப் பெஞ்சுகள் உள்ளன.

தேவாலயத்திற்கு 1914 வரை மின்சாரம் இல்லை. மின்சார விளக்குகள் மற்றும் விசிறிகள் 1918இல் நிறுவப்பட்டன. இந்த தேவாலயம் 1998ஆம் ஆண்டில் ஒரு பாரம்பரிய தளமாக இருந்தது. இது பண்டைய மரபுவழி கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாகும். [5]

1857 ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின்போது வெளியே வைத்திருந்த துப்பாக்கிகள் ஒரு முறை திருடப்பட்ட பின்னர், பிரித்தானியத் துருப்புக்கள் துப்பாக்கிகளை உள்ளே கொண்டு வர அனுமதிக்கப்பட்டன. [6]

இது 1998 இல் ஐதராபாத்து நகரின் பாரம்பரிய கட்டமைப்பாக நியமிக்கப்பட்டது.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு