புனித வளனார் ஆலயம், களிமார்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு களிமார் பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தங்கள் வழிபாட்டுக்கு என குருசடி ஒன்றை, செல்வமணியின் உதவியுடன் அமைத்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். அந்த குருசடியில் பல அதிசயங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. [சான்று தேவை]
முதலில் இந்த பகுதி ஆலஞ்சி பங்குடனும் பின் குறும்பனை பங்குடனும் கடைசியில் குளச்சல் பங்குடனும் இணைக்கப் பட்டு இருந்தது. இடைப்பட்ட காலத்தில் குருசடி ஆலயமாக மாறியது.
1952 இல் அருட் பணி செய்த அம்புரோஸ் அவர்கள், பங்கு பணியாளராக இருந்த போது, திரு தாவிது மேஸ்த்ரி அவர்களால் கிறிஸ்து அரசர் சுருபம் உருவாக்கப்பட்டு, ஆயர் ஆஞ்சி சுவாமி அவர்களால் நிறுவப்பட்டது. 1954 இல் அருட் பணி லோபஸ் அவர்கள் பங்கு பணியாளராக இருந்த போது, முதல் வெள்ளி சனி உட்பட வாரத்தில் முன்று திருபலிகள் ஆரம்பிக்க பட்டது மறை கல்வி மற்றும் கிறிஸ்தவ வாழ்வு சமுகமும் ஆரம்பிக்கப் பட்டது. அந்த நேரம் கோவில் முடுதம் திரு மரிய அருளப்பன் அவர்கள் பொருளர் பசிலி மேஸ்த்ரி அவர்கள் 1968 இல் அருட் பணி ஜோசபத் மரியா அவர்கள் பங்கு பணியாளராக இருந்த போது மறை மாவட்ட முதன்மை பணியாளர் வில்லவராயன் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1970 இல் அரு்ட் பணியாளர் கில்லாரி அவர்கள் காலத்தில் பங்கு மக்கள் உதவியுடன் ஆலய கட்டுமான பணிகள் தொடர்ந்தது 1974 இல் அருட் பணியாளர் ஜேசுதாஸ் அவர்களால் தினசரி திருபலி ஆரம்பிக்கப்பட்டது 1982 இல் பங்கு பணியாளராக அருட்பணி தோபியாஸ் அடிகளார் இருந்த போது 20 /10 / 1982 அன்று மேதகு ஆயர் ஆரோக்கிய சாமீ அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது
1984 இல் பணியாளர் ஜேம்ஸ் அவர்கள் பணிக்காலத்தில் பங்கு அருள் பணி பேரவை ஆரம்பிக்கபட்டது ஆலயத்தில் மின் இணைப்பு பணிகள் முழுமையாக செய்யபட்டது 1985 இல் பணியாளர் செர்வாசியஸ் மற்றும் மறைந்த அருட் சகோதரி கேன்டிடா அவர்களின் முயற்சியால் பங்கில் புனித வார திருவழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டது அருட் சகோதரி கேன்டிடா பங்கில் பக்தி முயற்சிகள் வளர அதிகம் உதவியவர்கள் பங்கு மக்கள் அனைவர்க்கும் குடும்பத்தில் ஒருவர் போன்ற்வர் 1990 முதல் 1997 வரை அருட்பணியாளர் செல்வராஜ் அருட்பணியாளர் கஸ்பர் அருட் பணியாளர் டையனீசியஸ் ஆகியோர் பங்கு பணியாளராக இருந்துள்ளனர் அருட் பணி டையனீசியஸ் அடிகள் களிமார் தனி பங்காக உருவாக உதவியவர் 14/05/1997 அன்று மேதகு ஆயர் லீயோன் தர்மராஜ் அவர்கள் தலைமை இல் களிமார் தனி பங்காக உருவானது முதல் பங்கு பணியாளர் அருட்பணி அருள் தேவதாசன் அடிகளார் இரும்பலி புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் நேசவாளர் வீதி புனித செபஸ்தியர் ஆலயமும் இதன் கிளை பங்குகள் தந்தை அருள் தேவதாசன் அவர்கள் முயற்சியால் ஆலயத்திற்கு முன்புள்ள நிலம் வாங்க பட்டு கடைகள் கட்ட பட்டது ஜெனரேட்டர் வாங்கப்பட்டது பழைய கோயில் இடிக்கப்பட்டு 2 பணியாளர் கள் தங்கும் வகை இல் பங்கு பணியாளர் இல்லம் கட்டப்பட்டது அன்பியங்கள் உருவாக்கப்பட்டது பங்கு வளர மிக முக்கிய காரணம் தந்தை அருள் தேவ தாசன் அவர்கள்
04/06/2002 இல் பங்கு தந்தையாக முன்னாள் குருகுல முதல்வர் சூசை மரியான் அடிகளார் பங்கு பணியாளர் ஆகவும் சில நாட்களுக்கு பிறகு இரட்சகர் சபையை சார்ந்த பணியாளர் சாந்தியாகு இணை பங்கு பணியாளர் ஆகவும் நியமிக்கப் பட்டனர். 2007 மே முதல் அருட்பணி செல்லையன் அவர்கள் பங்கு பணியாளராக பணி புரிகிறார்.
இப்பங்கானது கோட்டாறு மறைமாவட்டத்தில் குளச்சல் வட்டாரத்தில் மங்கல குன்று மண்டலத்தில் உள்ளது.
ஆலய பாதுகாவலர் திருவிழா ஆண்டு தோறும் மே மாதம் முதல் தேதியை உள்ளடக்கியவாறு கொண்டாடப்படும்