புனைவியத் திறனாய்வு

(புனைவியல் திறனாய்வு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனைவியத் திறனாய்வு என்பது கலை, இலக்கியம், மெய்யியல், சமயம், அரசியல் போன்ற பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய புனைவியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு ஆகும். 18 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இது 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பயன்பாட்டில் இருந்தது. புதியசெந்நெறியியத்தில் இருந்து அதற்கு எதிராகத் தோன்றிய இவ்வியக்கம் பல நாடுகளில் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கொண்டிருந்ததால் இதற்குச் சரியான வரைவிலக்கணம் கூறுவது கடினமானதாக காணப்படுகிறது.

கலைஞர்களும், இலக்கியப் படைப்பாளர்களும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் சுதந்திரமான இலக்கியம் படைக்க வேண்டும் என்னும் கொள்கையைப் புனைவியம் முன்னெடுத்தது. பகுத்தறிவு, விதிமுறைகள் போன்றவற்றுக்கு மாறாகக் கற்பனைக்குப் புனைவியம் முக்கியத்துவம் கொடுத்தது. உண்மை நிலை, யதார்த்தம் போன்றவற்றை இது முதன்மையானவைகளாகக் கருதவில்லை.

குறிப்புக்கள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனைவியத்_திறனாய்வு&oldid=2034353" இலிருந்து மீள்விக்கப்பட்டது