புபேந்திர குமார் தத்தா

புபேந்திர குமார் தத்தா (Bhupendra Kumar Dutta) (வங்காள: ভূপেন্দ্র কুমার দত্ত; 8 அக்டோபர் 1892 – 29 டிசம்பர் 1979) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் அனுசீலன் சமிதியிலிருந்து பிரிந்து சென்ற யுகாந்தர் என்ற புரட்சிக் குழுவில் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சிகரப் போராட்டங்களை மேற்கொண்டார். இவர் பிலாஸ்பூர் சிறைச்சாலையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக டிசமபர் 1917-ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார.

புபேந்திர குமார் தத்தா
ভূপেন্দ্র কুমার দত্ত
படிமம்:BhupendraDutta1.jpg
புபேந்திர குமார் தத்தா Bhupendra
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 8, 1892(1892-10-08)
தாக்கூர்பூர், ஜெஸ்சூர் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 29 திசம்பர் 1979(1979-12-29) (அகவை 87)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு Indian National Congress]] (ஆகஸ்டு, 1947க்கு முன்னாள்)
பாகிஸ்தான் தேசிய காங்கிரசு (1947க்கு பின்னாள்)
பணி புரட்சிகர இந்திய விடுதலை இயக்கம்

இந்திய விடுதலைக்கு பின்னர் இவர் பாகிஸ்தான் நாட்டின் பகுதியில் (தற்போது வங்காள தேசம் தங்கி, அந்நாட்டில் தேசிய காங்கிர்சு கட்சியை உருவாக்கி, அநாட்டின் மக்களவை உறுப்பினர் ஆனார். பாகிஸ்தான் இசுலாமிய மதச்சார்பு நாடாக அறிவிக்கப்பட்டதாலும், 1958-இல் இராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டதாலும், புபேந்திர குமார் தத்தா 1962-ஆம் ஆண்டில் இந்தியாவின் கொல்கத்தாவிற்கு திரும்பினார்.

மேற்கோள்கள்தொகு