புபொப 7510 (NGC 7510) என்பது புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பு 7510 என்ற திறந்த விண்மீன் கொத்து நட்சத்திரங்களைக் குறிப்பதாகும். இவை 11400[2] ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளன. செபியசு என்ற வடக்கு விண்மீன்குழு வகையான இவ்வானுறுப்பு காசியோப்பியா[3] விண்மீன் குழாம் எல்லைக்கருகில் உள்ளது. இந்தத் தொலைவில் இக்கொத்திலிருந்து வரும் தூசு மற்றும் விண்மீனிடை வளிப்படலத்தால் ஒளிமறைப்பு செய்யப்படுகிறது. புறஊதா நீலம் மற்றும் தோற்ற ஒளியளவு அளவியலின்படி இம்மறைப்பு E(B – V) = 0.90 ± 0.02 அளவு ஒளித்தரத்திற்குச் சமமாக உள்ளது[2]. இந்த விண்மீன் கொத்தில் B1.5 III என்ற விண்மீன் வகைப்பாட்டில் உள்ள பிரகாசமான பேருரு விண்மீன் இடம்பெற்றுள்ளது. பெர்சியஸ் திருகுசுருள் தாங்கியின்[4] ஒரு பகுதியை இக்கொத்து உருவாக்குகிறது. டிரம்பிளர் வகைக் கணக்கீட்டின்படி இக்கொத்து II 2 m[2] வகையென்றும் சுமார் 10 மில்லியன் ஆண்டுகள்[3] பழமையானது என்றும் அறியப்படுகிறது.

என்ஜிசி 7510
NGC 7510
கூர்நோக்குத் தரவுகள் (ஜே2000.0 சிற்றூழி)
விண்மீன் குழாம்செபியசு
வலது எழுச்சிக் கோணம்23h 11.1m[1]
காந்த இறக்கம்+60° 34′[1]
தொலைவு11.4 kly (3.48 kpc)[2]
தோற்ற ஒளிப்பொலிவெண் (V)7.9[1]
உருவளவு (V)7.0′[1]
இயற்பியல் இயல்புகள்
அகவை107[3]
இவற்றையும் பார்க்க: திறந்த பால்வெளிக் கொத்து

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 James O'Meara, Stephen (2007), Steve O'Meara's Herschel 400 Observing Guide, Cambridge University Press, p. 278, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521858933.
  2. 2.0 2.1 2.2 2.3 Paunzen, E.; et al. (November 2005), "CCD photometric search for peculiar stars in open clusters. VI. NGC 1502, NGC 3105, Stock 16, NGC 6268, NGC 7235 and NGC 7510", Astronomy and Astrophysics, 443 (1): 157–162, arXiv:astro-ph/0508151, Bibcode:2005A&A...443..157P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20053287.
  3. 3.0 3.1 3.2 Barbon, R.; Hassan, S. M. (February 1996), "A new study of the young open cluster NGC 7510", Astronomy and Astrophysics Supplement, 115: 325–332, Bibcode:1996A&AS..115..325B.
  4. Crossen, Craig; Rhemann, Gerald (2004), Sky Vistas: Astronomy for Binoculars and Richest-Field Telescopes, Springer, p. 78, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3211008519.

வெளி இணைப்புகள்

தொகு

ஆள்கூறுகள்:   23h 11m 00s, +60° 34′ 00″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_7510&oldid=1750741" இலிருந்து மீள்விக்கப்பட்டது