புரதச் சிறு நீர்
புரதச் சிறு நீர் (Proteinuria) என்பது சிறுநீரில் அதிக அளவில் புரதம் காணப்படும் ஒரு நிலையாகும். இது சில நோய்களில் ஏற்படலாம். இதன் ஒருவகை அல்புமின் சிறுநீர் (Albuminuria) என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாக ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவிலேயே அல்புமின் அல்லது புரதம் சிறுநீரில் காணப்படும். அல்புமின் முதன்மையான சுற்றோட்டப் புரதம் எனும் காரணத்தால் புரதச் சிறு நீர் பொதுவாக அல்புமின் சிறுநீர் என்று அழைக்கப்படுகின்றது. புரதச் சிறு நீர் உருவாக கலன்கோளம், சிறுநீரகத்தி ஆகியனவற்றில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம் அல்லது குருதியில் மிகையாக புரதம் சேர்க்கப்படுவது காரணமாக இருக்கலாம்.[1]
ஐ.சி.டி.-10 | R80. |
---|---|
ஐ.சி.டி.-9 | 791.0 |
DiseasesDB | 25320 |
ஈமெடிசின் | med/94 |
MeSH | D011507 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Proteinuria". 7 மே 2017 அன்று பார்க்கப்பட்டது.