புரா தமன் சரஸ்வதி, பாலி
புரா தமன் சரஸ்வதி (Pura Taman Saraswati) என்பது உபுத் தண்ணீர் அரண்மனை என்றழைக்கப்படுகின்ற பாலினிய இந்துக் கோயிலாகும். இந்தக் கோயில் இந்தோனேஷியாவில்பாலியில் உபுத் என்னும் இடத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும். புரா தமன் சரஸ்வதி அதன் தாமரை குளத்திற்காகச் சிறப்பினைப் பெறுகிறது.
வரலாறு
தொகுபுரா தமன் சரஸ்வதி உபுத்தின் இளவரசரான முதலாம் கோகோர்டா இளவரசர் கெடே அகுங் சுகாவதியின் ஆணையிட்டதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஒரு குழுவின் செயன்மை காரணமாக குஸ்டி நியோமன் லெம்பாட் [1] என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். குஸ்டி நியோமன் லெம்பாட்ஒரு பிரபலமான பாலினிய சிற்பக் கலைஞர் ஆவார். மேலும் அவர் உண்டகி [2] எனப்படுகின்ற சடங்குகளோடு தொடர்புடைய பாலினிய கட்டிடக் கலைஞர் ஆவார். சடங்குகளோடு தொடர்புடையவற்றிற்கு உதாரணமாக தகன கோபுரங்கள் மற்றும் மர சர்கோபாகி ஆகியவற்றைக் கூறலாம்.அவர் பிளாபாது மன்னனிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவருடைய கோபத்துக்கு ஆளாகி அரச நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய பின்னர் உபுத் வந்தடைந்தார். அங்கு சுகவதி அரச குடும்பத்தினரால் பணியமர்த்தப்பட்டார். உபுத் மற்றும் அண்டை கிராமங்களில் பல அரண்மனைகளையும் கோயில்களையும் அவர் கட்டினார். [3]
புரா தமன் சரஸ்வதியின் கட்டுமானப் பணி 1951 ஆம் ஆண்டில் தொடங்கி 1952 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. இக்கோயிலானது புராணம் கற்றல், இலக்கியம் மற்றும் கலை ஆகியவற்றிற்குரிய இந்து தெய்வமான சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [3]
கோயில் வளாகம்
தொகுபுரா தமன் சரஸ்வதி[தொடர்பிழந்த இணைப்பு] உபுத் பகுதியின் பமிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். புரா எனப்படுகின்ற கோயிலின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் தாமரை குளம் மற்றும் நீர் தோட்டம் ஆகும். இது உண்மையான கோயிலின் வெளிப்புற பகுதியை குறிக்கிறது. ப்ளூமேரியா (ஃபிராங்கிபனி) [4] மரங்கள் குளத்தின் விளிம்புகளை அலங்கரிக்கின்றன. அதே நேரத்தில் நேராக பாலம் போன்ற அணுகல் இந்து புராண நபர்களின் பராஸ் (எரிமலை டஃப்) சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் பல லெம்பாட்டின் படைப்புகள் ஆகும். உள் கருவறைக்குச் செல்வதற்கு மூன்று சிவப்பு செங்கல் கோரி அகுங் வாயில்கள் உள்ளன. இந்த வாயில்களில் மிகப்பெரியது மத்திய கோரி அகுங் ஆகும். அது இரண்டு உயரமான ப்ளூமேரியா மரங்களால் சூழப்பட்டுள்ளது. [5]
உள் முற்றத்தில் நேரான பாதை ஒரு அசாதாரண அலிங்-அலிங் மூலம் தடுக்கப்படுகிறது, இது ஒரு சுவர் ஆகும். இது பாலியின் கட்டிடக்கலையில் தீய சக்திகளை திசை திருப்புவதற்காகப் பயன்படுகிறது. இந்த சுவர் உண்மையில் 3 மீ (9.8 அடி) உயரம் உள்ள அரக்கர் சிலையின் பின்புறம் ஆகும். அந்த அரக்கர் ஜேரோ கேடே மேகாலிங் ஆவார். [5]
கோயிலின் மிகவும் புனிதமான, காஜா-காங்கின் (வடகிழக்கு) பக்கத்தில் ஒரு பத்மாசன சன்னதி [6] அமைந்துள்ளது. இந்த பத்மாசனத்தின் அடிப்பகுதி ஆமை மற்றும் பல நாகங்களின் பராஸ் செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இவை பேய்களின் உலகத்தை ( பூர் ) குறிக்கின்றன. பத்மாசனத்தின் மேல் பகுதியில் தங்க வெற்று சிம்மாசனம் உள்ளது. அதில் பாலினிய இந்து மதகுருவின் மிக உயர்ந்த தெய்வமான அசிந்தியனின் உருவத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. [7]
உள்ளே மூன்று காலியாக உள்ள சிம்மாசனங்கள் உள்ளன. அது இந்து மதத் தெய்வங்களான மும்மூமூர்த்தி எனப்படுகின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த பக்கத்தில் பல மேரு கோபுரங்களும் அமைந்துள்ளன. கோயிலில் பேர் பரோங் உள்ளது. அங்கு பரோங் [8] பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அது கிராமத்தாரால் சடங்குகளை நடத்தப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பேல் பரோங்கில் இரண்டு பரோங் உருவங்கள் காணப்படும். ஒன்று சிங்கம் போன்ற பரோங் கெட் ஆகும். மற்றொன்று பன்றி போன்ற பரோங் பாங்கல் ஆகும். அங்கு சரஸ்வதி தேவியின் சிலையும் உள்ளது. [7]
குறிப்புகள்
தொகு- ↑ "I Gusti Nyoman Lempad", Wikipedia (in ஆங்கிலம்), 2019-09-21, பார்க்கப்பட்ட நாள் 2019-11-30
- ↑ "Ngaben", Wikipedia (in ஆங்கிலம்), 2019-06-22, பார்க்கப்பட்ட நாள் 2019-11-30
- ↑ 3.0 3.1 Kartajaya 2009, ப. 66.
- ↑ "Plumeria", Wikipedia (in ஆங்கிலம்), 2019-09-19, பார்க்கப்பட்ட நாள் 2019-11-30
- ↑ 5.0 5.1 DK Travel 2016, ப. 94.
- ↑ "Padmasana (shrine)", Wikipedia (in ஆங்கிலம்), 2019-10-14, பார்க்கப்பட்ட நாள் 2019-11-30
- ↑ 7.0 7.1 Reader & Ridout 2002, ப. 203.
- ↑ "Barong (mythology)", Wikipedia (in ஆங்கிலம்), 2019-10-22, பார்க்கப்பட்ட நாள் 2019-11-30