புரிகோல்
புரிகோல் (pitchfork) என்பது நீணட கோலில் இரண்டு அல்லது மூன்று புரிக் கூரலகு பூட்டிய வேளாண்/தோட்டக் கருவியாகும், இது போரில் இருந்து வைக்கோலை எடுத்து அளைந்து வீசி அப்புறப்படுத்தப் பயன்படுகிறது. புரிகோலால் கூலத் தட்டுகளையும் இலைகளையும் எடுத்து வீசி அப்பறத்தலாம்.
இச்சொல் இதை விட தடித்த மூன்று அல்லது நான்கு புரி கூரலகுகளை உடைய மண்ணைக் கிளறித் தளர்த்தும் தோட்டக் கருவிக்கும் பயன்படுகிறது.தோட்டங்களில் இப்பணிக்காக கம்பிமுள் வாரியும் பயன்படுகிறது. வேளாண்மை சார்ந்த ஓவியங்களிலும் புரிகோலின் உருவம் தீட்டப்படுகிறது.
மாற்றுச் சொற்கள்
தொகுஇங்கிலாந்தின் சில பகுதிகளில், இது கிடுக்கி (prong) எனவும் வழங்குகிறது.[1] அயர்லாந்தின் சில பகுதிகளில், நான்கு கூரலகுப் புரிகோலைக் குறிக்க இடுக்கி (sprong) எனும் சொல்லும் வழங்குகிறது.[2]
விவரிப்பு
தொகுஇயல்பான புரிகோலி இரண்டு அல்லது மூன்று கூரலகுகளே கோலின் நுனியில் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக புரிகோலின் கூரலகுகள் எஃகாலோ வார்ப்பிரும்பாலோ வேறு பொன்மக் கலவையாலோ சேய்யப்படும். சிலவேளைகளில் மரத்தாலும் மூங்கிலாலும் செய்யப்படலாம். இதன் கைப்பிடி அல்லது கோல் மரத்தல் ஆனதக அமையும். கோல், நெகிழி அல்லது தொய்வ உறையிட்டோ இடாமலோ அமையலாம்.
உண்மையான புரிகோல்களில் இரண்டு அல்லது மூன்று கூரலகுகள் அமையும். ஆனால், உரப் புரிகோல்களில் நான்கோ அதற்கு மேற்பட்டோ கூட கூரலகுகள் அமைவதுண்டு. என்றாலும் வைக்கோல், கூலத்தட்டுகளைப் போன்ற் தளர்ந்த பொருட்களைக் கையாள நான்கு புரி புரிகோல்களௌம் பயன்படுகின்றன.[3] இதில் பத்து புரி கூரலகுகளும் அமையலாம்.
புரிகோலின் கூரலகு எண்ணிக்கை கையாளும் பொருளைச் சார்ந்துள்ளது. தூசு, மணல், சல்லிக் கற்கள் போன்றவற்றைக் கையாள நெருக்கமாக அமைந்த பல கூரலகு புரிகோல் தேவைப்படுகிறது. வைக்கோல், தட்டுகளைப் போன்ற பொருட்களைக் கையாள இரண்டு அல்லது மூன்று கூரலகுகளே போதுமானதாகும்.[3]
வரலாறு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Copper, Bob (1975). A Song for Every Season: A Hundred Years of a Sussex Farming Family. Paladin, St. Albans, Hertfordshire. p. 112. பார்க்கப்பட்ட நாள் August 26, 2019.
- ↑ Joyce, P. W. (2009). English As We Speak It in Ireland. p. 832. பார்க்கப்பட்ட நாள் August 26, 2019.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ 3.0 3.1 Rhode, Dr. Robert T. (October 1996). "Why All Pitchforks Are Not Alike". Farm Collector. பார்க்கப்பட்ட நாள் February 4, 2016.