புரூணையின் பண்பாடு

புரூணையின் பண்பாடு (culture of Brunei) மலாய் மக்களின் பண்பாடு மற்றும் இசுலாம் சமயத்தின் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது[1]. இந்நாட்டின் பண்பாடு அங்கு வாழும் மக்கள் குழுக்களைப் (மூன்றில் இரண்டு பங்கு மலாய் மக்களும், மூன்றாவது பங்கில் சீன மக்களும், இந்தியர்களும், டயாக் போன்ற மலாய் பழங்குடி மக்களும் உள்ளனர்[2]) பொருத்து அமைகிறது. மலேசிய மொழி புரூணையின் அலுவல் மொழியாக இருந்தாலும், புரூணை மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அதிகமாகப் பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இசுலாம் புரூணையின் அரச சமயமாகும். 2014ஆம் ஆண்டு முதல் இசுலாமியச் சட்ட முறைமை நடைமுறையிலுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Key Information: Culture and Tradition". Brudirect.com. Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  2. "The World Factbook: Brunei". நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 2015-07-21. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூணையின்_பண்பாடு&oldid=3575624" இலிருந்து மீள்விக்கப்பட்டது