புரூனோ ஓபெர்லெ

சுவிஸ் நாட்டு உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி

புருனோ ஓபெர்லே (Bruno Oberle) சுவிஸ் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆவார். 13 சூலை 2020 அன்று அவர் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு தொகு

ஓபெர்லெ, 12 அக்டோபர் 1955 இல் சுவிட்சர்லாந்தின் செயின்ட் காலனில் பிறந்தார். இவர், லோகார்னோ மற்றும் சூரிச்சில் வளர்ந்தார். இவர் சூரிக்கில் உள்ள சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். [1]

ஓபெர்லெ இகோல் பாலிடெக்னிக் ஃபெடரெல் டி லாசன்னே நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தார். இதே நிறுவனத்தின் பசுமைப் பொருளாதாரம் மற்றும் வளங்கள் நிர்வகிப்புத் துறையின் தலைவராகவும் பணிபுரிந்தார். இவர் சுற்றுச்சூழல் சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகத்தின் முன்னாள் இயக்குநராகவும் இருக்கிறார் [2] கூடவே, சுற்றுச்சூழல் துறையின் மாநில செயலாளராகவும் பணிபுரிந்தார். [3] தற்போது, இவர் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Bruno Oberle". World Resources Forum (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-10-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  2. "Bruno M.C Oberle - Panel Member - Switzerland". International Resource Panel (IRP). 7 July 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  3. "Bruno Oberle". IRGC (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 14 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  4. "Dr Bruno Oberle named IUCN Director General". IUCN (in ஆங்கிலம்). 2020-07-13. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூனோ_ஓபெர்லெ&oldid=3590279" இலிருந்து மீள்விக்கப்பட்டது