புரொட்டோஸ்டோம்
Protostomes புதைப்படிவ காலம்: | |
---|---|
A Caribbean Reef Squid, an example of a protostome. | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
துணைத்திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Protostomia Grobben, 1908
|
Superphylums | |
புரொட்டோஸ்டோம் (Protostomia) என்பது புறமுதலுருப்படை, இடைமுதலுருப்படை, அகமுதலுருப்படை ஆகிய மூன்று மூலவுயிர்ப்படைகள் உடைய முப்படை விலங்குகளின் இரு பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய விலங்குப் பிரிவு டியூட்டெரோஸ்டோம் ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளிடையே முளையவியல் விருத்தியில் பல பிரதான வித்தியாசங்கள் உள்ளன.[1] புரொட்டோஸ்டோம் எனும் சொல் முதல் வாய் எனப் பொருள்படும். புரொட்டோஸ்டோம்களின் முளைய விருத்தியின் போது பின்வரும் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும்:
- இவற்றின் முட்டைக் கலமே தீர்க்கப்பட்ட முட்டையாக உள்ளது. முட்டையின் குழியவுரு அக, இடை, புற முதலுருப்படைகளாகப் பிரிக்கப்பட்ட வகையில் உள்ளது.
- எட்டுக்கலங்களின் நிலையின் போது சுருளிப் பிளவு முறையில் கலங்கள் இரட்டிப்படைந்து செல்லும்.
- புன்னுதரனாகும் போது அரும்பரில்லி ஆதிக் கருக்குடலை ஆக்கும். பின்னர் வளர்ச்சியின் போது அரும்பரில்லி நிறையுடலியில் வாயாக மாற்றமடைகின்றது.
- உடற்குழி காணப்பட்டால், அது பிளவுக் குழிய முறையில் உருவாக்கப்படும்.[2]
பிரதான புரொட்டோஸ்டோம் கணங்கள்:
- தட்டைப் புழுக்கள் (Platyhelmenthis)
- உருளைப் புழுக்கள் (Nematoda)
- வளையப் புழுக்கள் (Annelida)
- மெல்லுடலிகள் (Mollusca)
- கணுக்காலிகள் (Arthropoda)
மேற்கோள்கள்
தொகு- ↑ Arendt, D.; Technau, U.; Wittbrodt, J. (4 January 2001). "Evolution of the bilaterian larval foregut". Nature 409 (6816): 81–85. doi:10.1038/35051075. பப்மெட்:11343117. http://www.nature.com/nature/journal/v409/n6816/full/409081a0.html. பார்த்த நாள்: 2008-07-14.
- ↑ Hejnol, A; Martindale, MQ (Nov 2008). "Acoel development indicates the independent evolution of the bilaterian mouth and anus.". Nature 456 (7220): 382–6. doi:10.1038/nature07309. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:18806777.