புரோகுராட்டி

புரோகுராட்டி (Procuratie) (இத்தாலியம், "procuracies") என்பது வெனிசு நகரின் செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் முன்று இணைப்புகள் கொண்ட ஒரு கட்டடம் ஆகும். இவை செயின்ட் மார்க்கின் கடிகார கோபுரத்துடன் இணைக்கப்பட்டவை. இது வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிட கட்டுமானப் பாணியின் வடிவம் ஆகும். இந்த கட்டடத் தன் இறுதி வடிவை நெப்போலியனின் ஆக்கிரமிப்பின்போது பெற்றது. இந்தக் கட்டிடம், வெனிஸ் நகரின் மிக நீளமான (500 அடி) கட்டிடம் என்ற பெயரைப் பெற்றது.

செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் இடது பக்கத்தில் புரோகுராட்டி வெக்கி, வலதுபுறத்தில் நெப்போலியனிக் விங்.

இதன் சதுர வளாகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள புர்காரிட்டி வெக்கீச்சின் கட்டிடமே பழமையானது. இது பன்னிரெண்டாவது நூற்றாண்டில் இரண்டு மாடி அமைப்பாக கட்டப்பட்டது. சான் மார்கோவின் சாரார் பகுதியானது அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றைக் கொண்டது. இவை பதினாறாம் நூற்றாண்டில் தீக்கிரையான பிறகு கோடூசியின் மூன்று மாடி வடிவமைப்பானது அதன் கோதிக் கட்டிடக்கலையின் பாரம்பரியம் மீட்கப்பட்டது.

சதுக்கத்தின் தெற்குப் பக்கத்தில், புரோக்கரிடி நியூவ் கட்டடப் பணிகள் 1586 ஆம் ஆண்டில் வின்சென்சோ ஸ்கமோசியால் மிகவும் தீவிரமாக செந்நெறிக்காலக் கட்டிடக்கலை பாணியில் தொடங்கியது, இதன் பணிகள் 1640 ஆம் ஆண்டில் லொங்கெனாவால் நிறைவு செய்யப்பட்டது. இது அலுவலகங்களுக்கு அதிக இடம் ஒதுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு கட்டிடங்களும் முதலில் சதுக்கத்தின் மேற்குப் பகுதியில் சிறகுகளைக் கொண்டிருந்தன, அவை சிறிய தேவாலயத்தால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தன. சுமார் 1810 ஆம் ஆண்டில், சிறகுகள் மற்றும் தேவாலயம் போன்றவை இடிக்கப்பட்டு மூன்றாம் கட்டமாக நெப்போலியோனிக் விங் ஆப் தி புரோக்கரேடிஸ் கட்டப்பட்டது. இது ஒரு நியோகிளாசிக்கல் முறையில் குசீப் மரியா சோலி என்பரால் வடிவமைக்கப்பட்டது.

இக்கட்டடம் சுமார் 500 ஆண்டுகளாக இத்தாலிய அரச குடும்பத்தினர், அரசியல்வாதிகள் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் கட்டிடத்தை புனரமைத்து பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க இத்தாலிய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் புணரமைப்புப் பணிகளை 2020 ஆம் ஆண்டுக்குள் முடிந்து, பொது மக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி இந்தக் கட்டிடம், கலை நிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், கருத்தரங்குகள், அரசு நலத் திட்டங்களுக்காகப் பயன்படவிருக்கிறது. இதற்காக பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் சர் டேவிட் சிப்பர்ஃபீல்ட், இந்தக் கட்டிடத்தைப் புனரமைக்க உள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. கனி (13 அக்டோபர் 2017). "மெல்லத் திறக்கும் கதவு!". செய்தி. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோகுராட்டி&oldid=3577852" இலிருந்து மீள்விக்கப்பட்டது