புரோசில் குழு
வேதி வினைக்குழு
புரோசில் குழு (Brosyl group) என்பது BrC6H4SO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். கரிம வேதியியலில் இது பாரா-புரோமோபீனைல்சல்போனைல் குழு என்ற பெயராலும் அறியப்படுகிறது. புரோசில் குழு பொதுவாக BrC6H4SO2Cl என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் புரோசில் குளோரைடு சேர்மத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்படுகிறது. இது சல்போனைல் எசுதர்கள் மற்றும் பாரா-புரோமோபீனைல்சல்போனிக்கு அமிலத்தின் அமைடுகளை உருவாக்குகிறது. புரோசிலேட்டு என்ற சொல் பாரா-புரோமோபீனைல்சல்போனிக்கு அமிலத்தின் (BrC6H4SO3−) அயனியைக் குறிக்கிறது.[1]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Smith, Michael B.; March, Jerry (2007). March's Advanced Organic Chemistry (6th ed.). John Wiley & Sons. p. 497. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-72091-1.