புரோடாக்டினியம் டெட்ரா அயோடைடு
புரோட்டாக்டினியம் டெட்ரா அயோடைடு (Protactinium tetraiodide) என்பது PaI4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
இனங்காட்டிகள் | |
---|---|
15513-96-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
I4Pa | |
வாய்ப்பாட்டு எடை | 738.65 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுரோட்டாக்டினியம் பெண்டா அயோடைடுடன் அலுமினியத்தைச் சேர்த்து சுமார் 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் குறைத்தல் வினை நிகழ்ந்து புரோடாக்டினியம் டெட்ரா அயோடைடு உருவாகிறது:[3]
- 3PaI5 + Al -> 3PaI4 + AlI3
புரோடாக்டினியம்(V) அயோடைடுடன் ஐதரசனைச் சேர்த்து 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலமும் ஒடுக்குதல் வினையின் மூலம் புரோடாக்டினியம் டெட்ரா அயோடைடு தயாரிக்கலாம்.:[4]
- 2PaI5 + H2 -> 2PaI4 + 2HI
இயற்பியல் பண்புகள்
தொகுபுரோடாக்டினியம் டெட்ரா அயோடைடு சேர்மம் கருப்பு அல்லது அடர் பச்சை நிறத்திலான படிகங்களாக உருவாகிறது.[4] இதன் கட்டமைப்பு அறியப்படவில்லை.[5]
வேதியியல் பண்புகள்
தொகுவெற்றிடத்தில் ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் புரோடாக்டினியம் டெட்ரா அயோடைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் ஆக்சிசனேற்ற வினை நிகழ்கிறது:[6]
- 3PaI4 + Sb2O3 -> 3PaOI2 + 2SbI3
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Protactinium » protactinium tetraiodide". webelements.com.
- ↑ Brown, David; Canterford, J. H.; Colton, Ray (1968). Halides of the Transition Elements: Halides of the lanthanides and actinides, by D. Brown (in ஆங்கிலம்). Wiley. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-10840-6. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 28 February 1970. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057861-3. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ 4.0 4.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3509. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Emeléus, Harry Julius; Sharpe, A. G. (1959). Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 19. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
- ↑ Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, J. (2010). The Chemistry of the Actinide and Transactinide Elements (PDF). Dordrecht: Springer. p. 874. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0210-3. Archived from the original (PDF) on 26 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.